செய்திகள் :

பெரியார் அறிவுலகம் நூல் சர்ச்சை: "பொது நூலகங்களை ஆய்வு செய்ய விசாரணை ஆணையம் வேண்டும்" - திருமாவளவன்

post image

Qகோவை பெரியார் அறிவுலகத்தில் உண்மைக்கு முரணான கருத்துகளைக் கொண்ட புத்தகங்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது தமிழ்நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதை எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

பெரியார் அறிவுலக நூல் மோசடி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“நூலகத்தில் வரலாற்றுப் பிழைகள் மலிந்த நூல்கள் : விசாரணை ஆணையம் அமைத்து உண்மை கண்டறிய வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!

கோவை பெரியார் அறிவுலகம்
கோவை பெரியார் அறிவுலகம்

கோவையில் அண்மையில் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் திறந்து வைக்கப் பெற்ற ‘பெரியார் அறிவுலகம்’ என்னும் நூலகத்தில் இடம்பெற்றுள்ள பல நூல்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் அந்த நூலகத்தை நேரில் சென்று பார்வையிட்டதில் அவர் இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி மனம் நொந்து தனது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பேரதிர்ச்சி

சான்றுக்குச் சில நூல்களைக் குறிப்பிட்டு நூல்களைக் கொள்முதல் செய்ததில் எத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். இது மிகுந்த பேரதிர்ச்சியை அளிக்கிறது.

போலி நிறுவனங்களின் பெயரால் தரமில்லாத நூல்களைக் கூடுதலான விலைக்குக் கொள்முதல் செய்ததால் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது என ஊகிக்கும் அதே வேளையில்,

வரலாற்றுப் பிழைகள் மலிந்த மிகவும் கீழான நூல்களை நூலகங்களில் வைத்திருப்பது புதிய இளைய தலைமுறையினரைப் பாழாக்கும் மிக மோசமான மன்னிக்க முடியாத பெருங்குற்றம் ஆகும். இது தீராத ஆத்திரத்தையும் பெருங்கவலையையும் அளிக்கிறது.

திருமாவளவன் அறிக்கை
திருமாவளவன் அறிக்கை

விசாரணை ஆணையம் அமையுங்கள்

இதன்பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிந்து தொடர்புடையோர் யாவரையும் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனை அளித்திட அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட அரசுக்கான பொதுநூலகங்களில் இடம்பெற்றுள்ள நூல்களின் உள்ளீட்டுக்கான தரம் எத்தகையது என்பதைக் கண்டறியவும்;

போலி நிறுவனங்களின் மூலம் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளைக் கண்டறிந்து தொடர்புடையோரைத் தண்டிக்கவும் ஏதுவாகத் தமிழ்நாடு அரசு உடனடியாக ‘விசாரணை ஆணையம்’ ஒன்றை அமைத்திட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.”

"E20 420 ஆக மாறிவிட்டது; நீங்கள் ஆசையாக வாங்கிய கார் பாழாகிறது" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் எரிபொருள் பிரச்னை ஏற்பட்டதிலிருந்து, பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகம் செய்யும் நடைமுறை நம் நாட்டிற்குள் வந்துள்ளது.ஆனால், பெட்ரோலில் 20 சதவிகிதத்திற்கு அதிகமாக எத்தனால் கலந்... மேலும் பார்க்க

'இந்தியாவின் ராமர்களும்...மோடி காலத்திய வலதுசாரி படங்களும்!' - ஓர் அலசல்!

தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் 'ராமாயணம்' திரைப்படத்தின் ஒரு புரோமஷன் நிகழ்ச்சி. அதில் திரைப்படத்தில் ராமராக நடித்திருக்கும் ரன்பீர் கபூர், 'எலான் மஸ்க் இப்போதுதான் பறக்கும் காரை கண்டுபிடித்த... மேலும் பார்க்க

ஈரான் போர்: "உண்மை எல்லோருக்கும் தெரியும்; நான் மட்டும் தடுத்திருக்காவிட்டால்..!" - ட்ரம்ப்

ஈரான் போரைத் தொடர்வதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு வேகத்தடை ஏற்பட்டுள்ளது.என்ன காரணம்?அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி (ட்ரம்ப் கட்சியின் எதிர்க்கட்சி) பெரும்பான்மை பெற்றதே இதற்குக் கார... மேலும் பார்க்க

'மக்கள் என் பக்கம்; 234 தொகுதிகளுக்கும் ஒரு திட்டம்' - தனுஷ் சூசகம்!

சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடிகர் தனுஷின் 'ஓம்' பட ஆடியோ வெளியீட்டு விழா நடந்திருந்தது. இதில் பேசிய தனுஷ் தன்னை யாரும் பின்னாலிருந்து இயக்கவில்லை எனப் பேசியிருக்கிறார். தனுஷ்கடந்த சில மாதங்களா... மேலும் பார்க்க

"பிரதமர்-உள்துறை அமைச்சர் கையும் களவுமாக பிடிபட்டுவிட்டார்கள்! மறைக்க என்னென்னவோ..!" - காங்கிரஸ்

சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கான நடைமுறைகளைத் தேர்தல் ஆணையம் அடிக்கடி மாற்றுவதைச் சாடி, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்புப் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “... மேலும் பார்க்க