செய்திகள் :

போப் 'இடதுசாரி' அரசியல் செய்கிறார்; கொரோனா காலத்தில் பாதிரியார்கள் கைது நடந்ததே? - ட்ரம்ப் ஆவேசம்

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் லியோ XIV-ஐ கடுமையாக விமர்சித்துத் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், போப் லியோ "குற்றவாளிகளைத் தட்டிக்கேட்கத் துணிவற்றவர்" என்றும், "வெளியுறவுக் கொள்கையில் கோட்டை விடுபவர்" என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

போப் லியோ XIV அண்மையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

போப் லியோ XIV
போப் லியோ XIV

"அதிகார மதம் மற்றும் போரின் வெறித்தனம் உலகை அழிக்கும்" என்று அவர் எச்சரித்திருந்தார்.

கொரோனா காலகட்டத்தில் தேவாலயங்கள் மூடப்பட்டதையும், பாதிரியார்கள் மற்றும் மத குருக்கள் கைது செய்யப்பட்டதையும் போப் லியோ கண்டிக்கவில்லை என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

"அன்று திருச்சபை அனுபவித்த பயத்தைப் பற்றி பேசாத போப், இப்போது எனது நிர்வாகத்தைப் பார்த்து பயப்படுவதாகக் கூறுவது வேடிக்கையானது" என்று ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை போப் மறைமுகமாக ஆதரிப்பதாகவும், அமெரிக்காவிற்குப் போதைப் பொருட்களை அனுப்பி வந்த வெனிசுலா மீது எடுத்த நடவடிக்கையை அவர் விமர்சிப்பது முறையல்ல என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

"நான் அமெரிக்காவின் பாதுகாப்பிற்காகச் செயல்படுகிறேன், ஆனால் போப் அரசியல்வாதியாக மாறி இடதுசாரிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்" என்று சாடியுள்ளார்.

வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு அமெரிக்கர் போப்பாக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். "என்னைச் சமாளிக்கவே வாட்டிகன் இவரைத் தேர்வு செய்துள்ளது" என்று ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

சவுக்கு சங்கர் தாயார் மறைவு; அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரின் தாயார் கமலா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்ற... மேலும் பார்க்க

அதிர வைத்த விஜய்; எச்சரித்த முதல்வர் தரப்பு - தூத்துக்குடி அஜிதா திமுக-வில் இணைந்த பின்னணி!

தூத்துக்குடி தவெக நிர்வாகியான அஜிதா நேற்று திடீரென திமுக-வில் இணைந்திருக்கிறார். இதன் பின்னால் லோக்கல் அமைச்சர் ஒருவரின் தீவிர காய் நகர்த்தலும் கனிமொழியின் விருப்பமும் இருப்பதாக கிசுகிசுக்கின்றனர் விவ... மேலும் பார்க்க

தவெக: ``தபால் வாக்கு செலுத்துவதில் முறைகேடு நடந்திருக்கிறது" - சிடிஆர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தலுக்கான பிரசாரமும் சுறுசுறுப்பாக நடந்துவருகிறது. இதற்கிடையில், 85 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலை... மேலும் பார்க்க

அறிஞர் அண்ணா டு விஜயகாந்த் - தலைவர்கள் தேர்தலில் முதன் முதலில் வெற்றி பெற்ற தொகுதி எது தெரியுமா?

தமிழக அரசியலில் கோலோச்சிய முக்கிய தலைவர்கள் எந்த தொகுதியில் முதன் முதலில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்கள் என்று தெரியுமா? திமுக-வை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா, 1957-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் த... மேலும் பார்க்க

`திமுக வெற்றிபெற உதவிய ஜெயலலிதா' - 1989 தேர்தல் களம் சொல்லும் அரசியல் | Vote Vibes

தமிழக அரசியல் வரலாற்றில் 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஒரு திருப்புமுனை. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க சந்தித்த முதல் தேர்தல். ஆனால், அசைக்க முடியாத சக்தியாக இருந்த அந்த இயக்கம... மேலும் பார்க்க