``தலைமைச் செயலகத்தில் மின்வெட்டுக்கு காரணம் இதுதான்" - மின்வாரியம் விளக்கம்
``போராட வந்தவர்கள் குரலை ஒடுக்க முயல்வது கொடுங்கோல் ஆட்சி" - சாடும் டிடிவி தினகரன்
மருத்துவப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ``பணிநிரந்தரம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று போராடவிருந்த பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை மீறி போராட வந்தவர்கள் வலுக்கட்டாயமாக கைது - மக்களின் குரலை கேட்பது தான் மக்களாட்சி அவர்களின் குரலை ஒடுக்க முயல்வது கொடுங்கோல் ஆட்சி.

பணி நிரந்தரம், தற்செயல் விடுப்பு, பணி மாறுதல் கலந்தாய்வு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பாக போராடவிருந்த பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு அனுமதி மறுத்து அவர்களை ஆங்காங்கே வீட்டுக் காவலில் அடைத்து வைத்ததோடு, அதனை மீறி போராட வந்தவர்களை குண்டுக்கட்டாக கைதுசெய்திருக்கும் காவல்துறையின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஜனநாயகம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றான போராட்டத்தின் மூலமாக தங்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்ற பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களை குற்றவாளிகளை போல சித்தரித்து அவர்களை வீட்டுக் காவலில் வைத்தும், கைது செய்திருப்பதும் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். தவெக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் தொடங்கி விவசாயிகள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மின்சாரத்துறை பணியாளர்கள் என அனைவரும் நாள்தோறும் தங்களின் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தவெக அரசு அனைத்து தரப்பு மக்களுக்கான அரசு என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் பெருமை பேசிக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது.
போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதிநிதிகளை வீட்டுக் காவலில் அடைப்பது, காவல்துறையை பயன்படுத்தி அடக்குமுறையை ஏவுவது என தவெக ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அத்துமீறல்களும், அராஜகப் போக்குகளும் நாம் தமிழகத்தில் தான் வாழ்கிறோமோ அல்லது அடிமை நாட்டில் வாழ்கிறோமோ என்ற சந்தேகத்தை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
எனவே, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களை உடனடியாக விடுவிப்பதோடு, கைது செய்யப்பட்டவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர முன்வர வேண்டும் என மருத்துவத்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb















