செய்திகள் :

``மகாராஷ்டிரா அரசின் அடக்குமுறையையாவது முதல்வர் விஜய் கண்டிப்பாரா?" - டிடிவி தின்கரன் கேள்வி

post image

டெல்லிக்குப் போராட்டம் நடத்த சென்ற தமிழக விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தப்பட்டு தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், ``தமிழக விவசாயிகள் மீதான மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தின் அடக்குமுறையையாவது தமிழக முதலமைச்சர் கண்டிப்பாரா ? அல்லது காவிரி விவகாரத்தைப் போலவே மவுனம் காப்பாரா ?

காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் போராட்டம் நடத்துவதற்காக ரயில் மூலமாக டெல்லி சென்ற தமிழக காவிரி டெல்டா பாசன மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகளை நாக்பூரில் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக மீண்டும் தமிழகத்திற்கே அனுப்பி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் சட்டவிரோதப் போக்கை கண்டித்தும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஜனநாயகம் தங்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையைப் பயன்படுத்தி டெல்லிக்குப் போராடச் சென்ற தமிழக விவசாயிகளைத் தடுத்து நிறுத்தவும், அவர்களைத் திருப்பி அனுப்பவும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் அங்குள்ள காவல்துறைக்கும் எங்கிருந்து அதிகாரம் வந்தது?

கர்நாடக மாநில முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி கையோடு தண்ணீரைக் கொண்டு வரப்போவதாக தவெக ஆச்சரியகுறிகள் பரப்பிய ரீல்ஸ்கள் அனைத்தும் அறுந்து போகின.

இந்த நிலையில், இயற்கையின் கொடையால் கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பொழிந்து காவிரிக்கு நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏதோ தாங்களே இயற்கையிடம் மன்றாடி நீரைக் கொண்டுவந்ததைப் போல தவெகவினர் தங்கள் தலைவரை இயற்கையின் அருளைப் பெற்ற தேவதூதன் எனவும், தெய்வக் குழந்தை எனவும் தற்போது ரீல்ஸ் பரப்பிக் கொண்டு இருப்பது நகைப்புக்குரியது.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

எனவே, டெல்லி சென்று கொண்டிருந்த விவசாயிகளைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்திடன் உடனடியாக விளக்கம் கேட்பதோடு, தனது கும்பக்கர்ண தூக்கத்தைக் கலைத்து தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை எந்தவகையிலும் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நின்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க