செய்திகள் :

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பிரிஜ் பூஷன் சரண் சிங் விடுதலை; பட்டாசு வெடித்து வரவேற்ற பாஜக-வினர்

post image

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் (WFI) முன்னாள் தலைவரும், பா.ஜ.க-வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகள் தொடுத்த பாலியல் துன்புறுத்தல் வழக்கிலிருந்து டெல்லி நீதிமன்றத்தால் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், டெல்லியிலுள்ள மல்யுத்தக் கூட்டமைப்பு அலுவலகம், பிரிஜ் பூஷனின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களின்போது தங்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக 6 பெண் மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளித்திருந்தனர்.

பிரிஜ் பூஷன் சரண் சிங்
பிரிஜ் பூஷண் சரண் சிங் - மல்யுத்த வீராங்கனைகள்

இதில் மைனர் வீராங்கனை ஒருவர் அளித்த புகாரின் பேரில் பிரிஜ் பூஷன் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், பின்னர் அந்த வீராங்கனை புகாரைத் திரும்பப் பெற்றதால் அவ்வழக்கு முடிக்கப்பட்டது.

ஜூன் 15, 2023 அன்று இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 354 (பெண்ணின் கண்ணியத்தைக் குலைத்தல்), 354A (பாலியல் துன்புறுத்தல்), 354D (பின்தொடர்ந்து தொல்லை தருதல்) மற்றும் 506(1) (மிரட்டல் விடுத்தல்) ஆகியவற்றின் கீழ் டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

மே 2024-ல், 5 வீராங்கனைகளின் புகார்களின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கப் போதிய ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை நீதிபதி அஸ்வினி பன்வார் அமர்வில், ``இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷனும், இரண்டாம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த மல்யுத்தக் கூட்டமைப்பின் முன்னாள் உதவிச் செயலாளர் வினோத் தோமரும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்" என்றார்.

பிரிஜ் பூஷன் சரண் சிங்
பிரிஜ் பூஷன் சரண் சிங்

விடுதலையான பிரிஜ் பூஷனை மாலை மரியாதையுடனும், பட்டாசு வெடித்தும் பா.ஜ.க தொண்டர்கள் வரவேற்றனர். நீதிமன்றத் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரிஜ் பூஷன் சரண் சிங், ``வழக்கு தொடங்கிய முதல் நாளிலேயே என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தூக்கிலிட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தேன். இன்று நீதிமன்றம் என்னை கௌரவமான முறையில் விடுவித்துள்ளது. இது எனக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

புதுச்சேரி: சாலையின் நடுவில் பேனர்கள்... அத்துமீறும் எம்.எல்.ஏக்கள்; அதிகாரிகளைத் தாக்கும் ரௌடிகள்

26 ஆண்டுகளாக அமலில் இருக்கும் பேனர் தடைச் சட்டம்!புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2000 ஆம் முதல் பேனர் தடுப்புச் சட்டம் அமலில் இருக்கிறது. அதுதவிர சென்னை உயர் நீதிமன்றத்தின் நிலையாணையும் இருக்கிறது. இவற்ற... மேலும் பார்க்க

"ஆட்சி அமைத்த பின் 'பாஜக' என்ற சொல்லைக்கூட உச்சரிக்காத தைரியசாலி நமது முதல்வர்" - உதயநிதி காட்டம்

மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசைக் கண்டித்தும், தவெக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் இன்று (ஆகஸ்ட்.3) நடைபெற்று... மேலும் பார்க்க

'விஜய்யின் ஆன்லைன் தளபதி; ஜெகதீஸின் பரிந்துரை!'- TN Fact Check Unit இன் தலைவராக்கப்பட்ட 'குரு' யார்?

தமிழக அரசின் 'உண்மை சரிபார்ப்புக் குழு'வின் பெயரை 'தகவல் நம்பகத்தன்மை சரிபார்ப்புக் குழு' எனப் பெயர் மாற்றி 'குரு' என்பவரை அதற்கு தலைவராக நியமித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. யார் இந்த குரு?அம... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "உடனே தீபம் ஏற்ற இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது!" – உச்ச நீதிமன்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிர... மேலும் பார்க்க

மின்வாரியம்: ஒரே நேரத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கோரிக்கை நிலுவையில் இருந்தது. இந்நிலையில், உதவி பொறியாளர்களாக பணியாற்றி வந்தவர்களுக்கு உதவி செயல் பொறியாளர்களாக பதவி உயர்வு அள... மேலும் பார்க்க

தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்; விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னென்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், ““இவ்வளவு கேவலமான முதல்வரை தமிழகம் மட்டுமல்ல, இந்திய... மேலும் பார்க்க