செய்திகள் :

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மைனர் பெண்; முகத்தைச் சிதைத்துவிட்டு வீசிய கும்பல்

post image

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஹைலாகண்டி மாவட்டத்தில் 15 வயதேயான மைனர் பெண்ணை மர்ம நபர்கள் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அவர்கள் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரது முகம் மற்றும் தலையைச் சிதைத்து அடையாளம் காணமுடியாதபடி செய்து காட்டுக்குள் தூக்கிப்போட்டுள்ளனர். இரவு சுமார் 11 மணியளவில் கட்லிச்சேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலோய்சோரா பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

அப்பெண் தனது குடும்பத்தினருடன் விருந்து ஒன்றில் கலந்துகொள்வதற்காக உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார். இருப்பினும், உறவினர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் திரும்பி வரும்போது அவரை நடுவழியில் மறித்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ளனர். சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தபோது கடுமையாகச் கொடுமைப்படுத்தி இருக்க வேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

மைனர் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பியைச் செருகி சித்ரவதை செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மைனர் பெண்ணின் உடலை மீட்டு போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி இருக்கின்றனர். குற்றவாளியை உடனே கைது செய்யவேண்டும் என்று கோரி மைனர் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்காக ஐந்து பேர் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் அமிதாப் சின்ஹா ​​தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ''பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் மருத்துவ ரீதியாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கொலை செய்யப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால் எந்தவொரு முடிவிற்கும் வருவதற்கு முன்பு நாங்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். நாங்கள் இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்து வருகிறோம். மேலும் தற்போது நான்கு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று சின்ஹா ​​செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஹரியானா: பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை சரமாரியாகக் குத்திக் கொலை; முகமூடி அணிந்தவரின் வெறிச்செயல்

ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகில் உள்ள சிக்ரோனா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சந்தியா(29) என்ற ஆசிரியைப் பணியாற்றி வந்தார். பள்ளிக்குச் சற்று தொலைவில்தான் போலீஸ் நிலையம் இருக்கிறது. ஆசிரியை ச... மேலும் பார்க்க

"என் மகனை உயிருடன் வைத்திருக்க இதைச் செய்தேன்"- ஐஐடி-யில் தற்கொலை செய்த மகனுக்கு கோயில் கட்டிய தந்தை

கடந்த 2024ம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் அக்ஷித் பூக்யா என்ற இரண்டாம் ஆண்டு மாணவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐ.ஐ.டி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் ஒருக்கி... மேலும் பார்க்க

மும்பை சித்திவிநாயக் கோயில் உண்டியல் பணம் திருட்டு; ஆண்டுக்கு ரூ.18 கோடியை அபேஸ் செய்த 8 ஊழியர்கள்

அயோத்தி ராமர் கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அது போன்று உண்டியல் பணம் திருடப்படும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. மும்பையில் மிகவும் பிரபலமானது சித... மேலும் பார்க்க

'மீண்டும் ஒன்று சேரலாம் வா...' - விவாகரத்தான மனைவியை அழைத்துச் சென்று கொன்று புதைத்த கணவன்!

பஞ்சாப் மாநிலம், பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜ் (42) என்ற பெண் தனது கணவர் குர்மீத் சிங்கிடமிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குர்மீத் சி... மேலும் பார்க்க

சிவகாசி: திருமணம் மீறிய உறவு; 3 வயது பெண் குழந்தையை கொன்ற கொடூரன்- நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள சின்னக்கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி என்பவருக்கும் சுவாதி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 வயதில் விஷ்... மேலும் பார்க்க

மார்க்கெட்டிங் நிறுவனத்தில் கொடுமை; வீடியோ வெளியிட்ட விருதுநகர் சிறுவன் - மீட்ட குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ராமன்பறம்பு பகுதியில் செயல்பட்டு வரும் மார்கெட்டிங் நிறுவனத்தில் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த மார்ச் மாதம் பணிக்கு சேர்ந்துள்ளார். முதலில் மேற்பார்வ... மேலும் பார்க்க