செய்திகள் :

ஹரியானா: பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை சரமாரியாகக் குத்திக் கொலை; முகமூடி அணிந்தவரின் வெறிச்செயல்

post image

ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகில் உள்ள சிக்ரோனா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சந்தியா(29) என்ற ஆசிரியைப் பணியாற்றி வந்தார். பள்ளிக்குச் சற்று தொலைவில்தான் போலீஸ் நிலையம் இருக்கிறது. ஆசிரியை சந்தியா இன்று காலை பள்ளியில் இருந்தார். அந்நேரம் முகமூடி அணிந்த நபர் ஒருவர் வாயில் வழியாக நடந்து சென்று சந்தியாவின் பெயரைக் கூறி கேட்டார்.

இது குறித்து சந்தியாவிற்கு தகவல் கொடுத்தவுடன் சந்தியா அந்த நபரைச் சந்திக்க பள்ளி கேட் அருகில் வந்தார். வெளியே வந்தவுடன் சந்தியாவிடம் முகமூடி அணிந்த நபர் அவரின் பெயரைக் கேட்டுள்ளார்.

சந்தியா பெயரைச் சொன்னவுடன் முகமூடி அணிந்திருந்த நபர் சந்தியாவைச் சரமாறியாக கத்தியால் குத்த ஆரம்பித்தார். இதில் சந்தியா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். ஆசிரியைச் சத்தம் கேட்டு பள்ளி நிர்வாகி ஓடி வந்தார். ஆனால் அவரையும் கத்தியைக் காட்டி மிரட்டி அருகில் வரவிடாமல் செய்துவிட்டார்.

பின்னர் மீண்டும் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்தியாவிடம் சென்று அவரை வயிறு மற்றும் முகத்தில் கத்தியால் மீண்டும் குத்தினார்.

30 விநாடியில் 35 முறை குத்தினார். பின்னர் அந்த நபர் பைக்கில் தப்பிச்சென்றுவிட்டார்.

சம்பவ இடத்தில் சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். இக்காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதில் முகமூடி அணிந்த நபர் பள்ளிக்குள் நுழைந்து லாபியில் காத்திருப்பதைக் காட்டுகிறது. அவர் ஆசிரியரைக் கண்டவுடன், அவர் ஆசிரியையை வெளியே செல்லும்படி சமிக்ஞை செய்கிறார்.

அதனைத்தொடர்ந்து சந்தியாவின் கழுத்தைப் பிடித்து வெளியே இழுத்து கத்தியால் குத்துவது அதில் பதிவாகி இருந்தது. கத்தியால் குத்திய நபரின் பெயர் அமித் என்று தெரிய வந்தது. அவரை போலீஸார் உடனே கைது செய்தனர்.

அமித் மீது சந்தியா மானபங்க புகார் கொடுத்திருந்தார். அப்படி இருந்தும் சந்தியாவிடம் பேச அமித் முயற்சி செய்தார். ஆனால் சந்தியா அதனைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் அடிக்கடி சந்தியாவைப் பின்தொடர்வதை அமித் வழக்கமாகக் கொண்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளார். பள்ளி வளாகத்திற்குள் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

"என் மகனை உயிருடன் வைத்திருக்க இதைச் செய்தேன்"- ஐஐடி-யில் தற்கொலை செய்த மகனுக்கு கோயில் கட்டிய தந்தை

கடந்த 2024ம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் அக்ஷித் பூக்யா என்ற இரண்டாம் ஆண்டு மாணவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐ.ஐ.டி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் ஒருக்கி... மேலும் பார்க்க

மும்பை சித்திவிநாயக் கோயில் உண்டியல் பணம் திருட்டு; ஆண்டுக்கு ரூ.18 கோடியை அபேஸ் செய்த 8 ஊழியர்கள்

அயோத்தி ராமர் கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அது போன்று உண்டியல் பணம் திருடப்படும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. மும்பையில் மிகவும் பிரபலமானது சித... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மைனர் பெண்; முகத்தைச் சிதைத்துவிட்டு வீசிய கும்பல்

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஹைலாகண்டி மாவட்டத்தில் 15 வயதேயான மைனர் பெண்ணை மர்ம நபர்கள் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்கள் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரது முகம் மற்றும்... மேலும் பார்க்க

'மீண்டும் ஒன்று சேரலாம் வா...' - விவாகரத்தான மனைவியை அழைத்துச் சென்று கொன்று புதைத்த கணவன்!

பஞ்சாப் மாநிலம், பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜ் (42) என்ற பெண் தனது கணவர் குர்மீத் சிங்கிடமிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குர்மீத் சி... மேலும் பார்க்க

சிவகாசி: திருமணம் மீறிய உறவு; 3 வயது பெண் குழந்தையை கொன்ற கொடூரன்- நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள சின்னக்கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி என்பவருக்கும் சுவாதி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 வயதில் விஷ்... மேலும் பார்க்க

மார்க்கெட்டிங் நிறுவனத்தில் கொடுமை; வீடியோ வெளியிட்ட விருதுநகர் சிறுவன் - மீட்ட குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ராமன்பறம்பு பகுதியில் செயல்பட்டு வரும் மார்கெட்டிங் நிறுவனத்தில் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த மார்ச் மாதம் பணிக்கு சேர்ந்துள்ளார். முதலில் மேற்பார்வ... மேலும் பார்க்க