செய்திகள் :

தூத்துக்குடி: சீனப் பட்டாசுகள் திருட்டு வழக்கு; த.வெ.க நிர்வாகி உட்பட 9 பேர் கைது – பின்னணி என்ன?

post image

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வந்த ஒரு கண்டெய்னரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சரக்குப் பெட்டகத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீனப் பட்டாசுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கண்டெய்னரை பறிமுதல் செய்து சட்ட விரோதமாக சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்த மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

சிப்காட் காவல் நிலையம்

பின்னர், அந்த கண்டெய்னரை சீல் வைத்து துறைமுகம் சாலையில் உள்ள தனியார் குடோனில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இந்த நிலையில், நீதிமன்ற விசாரணைக்காக கடந்த மே மாதம் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நீதிபதி முன்னிலையில் திறந்தபோது அந்த சரக்குப் பெட்டகத்தில் இருந்த 607 பட்டாசு பைகளும், 4 சிலிக்கான் பசை பைகளும் காலியாக இருந்தன.

பட்டாசுக்குப் பதிலாக அந்த பைகளில் மணல் நிரப்பப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த தனியார் குடோனின் மேலாளர் ஜான் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.  கடந்த இரண்டு மாதமாக நடத்திய விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த த.வெ.க வழக்கறிஞர் அணி அமைப்பாளரான ஜேசுதாஸ், ஆதிநாகலிங்கம், கோவிந்தசாமி, ராஜா, ஜெயகிருஷ்ணன், இம்மானுவேல், அனுஜித் ஜான்சன், சக்தி விஜய் ஆகிய 9 பேரும் சீனப் பட்டாசுகளை திருடி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

சிப்காட் காவல் நிலையம்

அதையடுத்து, 9 பேரையும் சிப்காட் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையில் த.வெ.க நிர்வாகியான ஜேசுதாஸை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் சாமுவேல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம்: `விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்' - என்ன நடந்தது?

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிமன்றம், ``நாளை சட்டமன்றம் கூட உள்ள நிலையில், இன்றே வ... மேலும் பார்க்க

உதயநிதி கைது: ``நாங்க என்ன தீவிரவாதிகளா... இப்படி அடிச்சிருக்கீங்க?" - மேயர் பிரியா

எதிர்க்கட்சித் தலைவர் கைதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக தொண்டர்கள் சாலை மறியல், அரசுக்கு எதிரான போராட்டம் போன்றவைகளில் ஈடுபட்டனர். அதைக் கலைக்கும் வகையில் சில இடங்களில் தடியடி நடத்... மேலும் பார்க்க

உதயநிதி : ``இரட்டை பொருள் தரும் வகையில் பேசுவதை தவிர்த்திருக்க வேண்டும்" - திருமாவளவன்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையில் ஒரு பகுதி சர்ச்சையானது. அது தொடர்பாக ஆளும் தவெக அரசு உதயநிதி ஸ்டாலினை கைது செய்திருக்கிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அவசர வழக்காக வி... மேலும் பார்க்க

மழைக்காலத்தில் கழிவுநீர் சூழும் அபாயம் - மதுரை கோரிப்பாளையத்தில் வலுக்கும் மக்கள் போராட்டம்!

கோயில் மாநகராமான மதுரையின் மத்தியப் பகுதி, கோரிப்பாளையம் - செல்லூர் பகுதியில் "செல்லூர் கண்மாயின்" வடிகால் தூர்வாரும் பணிகள் கடந்த மூன்று மாதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வடிகால் பணி காரணமாக கா... மேலும் பார்க்க

எப்போது தான் நிற்கும் பெண்கள் குறித்த இந்த அருவருக்கத்தக்க பேச்சுகள்?!

உதயநிதி ஸ்டாலின் - தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் துணை முதலமைச்சர், நயினார் நாகேந்திரன் - தமிழ்நாட்டின் பாஜக மாநிலத் தலைவர், சி.வி.சண்முகம் - தமிழ்நாட்டின் முன்னாள் சட்டத்து... மேலும் பார்க்க

'சட்டமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் வேண்டாமா முதல்வரே? - உதயநிதியின் கைதும் அடக்குமுறையும்

நாளை சட்டமன்றம் கூடவிருக்கிறது. தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறது. பட்ஜெட் தாக்கலுக்கு சரியாக 24 மணி நேரம் முன்பு எதிர்க்கட்சித் தலைவரை வீடு புகுந்து கைது செய்திருக்கிறது தமிழக க... மேலும் பார்க்க