பகலில் படிப்பு, இரவு பெட்ரோல் பம்பில் வேலை; கல்வியைத் தொடர போராடும் மும்பை மாணவி...
தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்; விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னென்ன?
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், ““இவ்வளவு கேவலமான முதல்வரை தமிழகம் மட்டுமல்ல, இந்திய வரலாறே பெற்றது கிடையாது. இனி வரும் தேர்தல்களில் 5% வாக்குகள் கூட பெற முடியாமல் விஜய் மற்றும் அவருடைய கட்சி தோற்றுப் போகும். பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தேர்தலில் தோற்றபோது, அப்போது இருந்த தலைவர்கள் நாகரீகமாக பேசினார்கள். ஆனால் இந்த உலகத்தில், நாட்டில் சட்டமன்றத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன் உன் தகப்பனாரை என்று சொல்கிறானே, நான் கேட்கிறேன்.

மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர்(விஜய்), உன்னை சட்டமன்றத்திற்குள் வைத்துப் பார்த்துக் கொள்கிறோம் . நாங்கள் என்ன கோமாளி பயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? சட்டமன்றத்தை கூட்டும் போது உனக்கு எலும்பு இருக்காது, உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம், சட்டமன்றத்தை கூட்டிப் பார். யார் ஓடியது? கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கரூரில் இருந்து கேராவனில் யாரை வைத்துக்கொண்டு நீ ஓடினாய்? நாங்க ஒன்னும் பயந்து ஓடவில்லை.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் பேய் அடிச்சது போல சட்டமன்றத்தில் உட்கார்ந்திருந்தார். கொத்து புரோட்டா போட போறாராம், உன்னை போல ஆயிரக்கணக்கான பரோட்டா கடைகளை நாங்க பார்த்திருக்கிறோம்.. நீ எவ்வளவு கேவலமாக பேசினாய்?” என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் தொனியிலும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக த.வெ.கவினர் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனைக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த மார்க்கண்டேயன், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மூன்று மனுக்களும் தள்ளுபடியானது.
இறுதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. . மனுவை விசாரித்த நீதிபதி, "இனிவரும் காலங்களில் பொதுவெளியிலோ மேடைகளிலோ மிரட்டல் விடுக்கும் வகையில் பேச மாட்டேன்" என மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்க வேண்டும். தூத்துக்குடி காவல் நிலையத்தில் நாள்தோறும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் மட்டும் காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது .












