``ஆதவ் அர்ஜுனா முதல்வராகிவிடக் கூடாது என்ற பயத்தில்..." - முதல்வர் விஜய்யைச் சாட...
மண்டாடி: ``சூரி அண்ணனின் கடின உழைப்பு" - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து
ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார், வெற்றிமாறன் ஆகியோர் தயாரித்து, மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள படம், 'மண்டாடி'. இதில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார்.
மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். சுகாஷ், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், ராமச்சந்திரன் துரைராஜ், 'ஆடுகளம்' முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போன்று தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான படகுப் போட்டியும், மீனவ மக்களின் பண்பாட்டு அடையாளத்தையும் முன்னிறுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில், நடிகர்கள் பலரும் நடிகர் சூரிக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
Great reports for #Mandaadi@sooriofficial annan’s hard work, persistence and relentless dedication have truly paid off. Good content always wins big! Congrats, my dear annan, and the entire team, on the blockbuster success ❤️
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 10, 2026
அதன் அடிப்படையில் நடிகர் சிவகார்த்திகேயன் தன் எக்ஸ் பக்கத்தில், ``மண்டாடி திரைப்படத்திற்குச் சிறந்த விமர்சனங்கள்! சூரி அண்ணனின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தளராத அர்ப்பணிப்பிற்குப் பெரிய பலன் கிடைத்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் எப்போதுமே மிகப்பெரிய வெற்றியைப் பெறும்! பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற எனது அன்பிற்குரிய அண்ணனுக்கும் முழு படக்குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.




















