செய்திகள் :

மதிமுக: `மகனால் வைகோ உயிருக்கு ஆபத்து; கார்ப்பரேட் ரெளடி.!" - முன்னாள் நிர்வாகியின் பரபரப்பு பேட்டி

post image

வைகோ தலைமையிலான ம.தி.மு.க-வில் 30 ஆண்டுகாலம் பயணித்து, தற்போது அ.தி.மு.க-வின் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளராக இருப்பவர் இ. மார்கோனி. இவர் சீர்காழியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, துரை வைகோ மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

அவர் அளித்தப் பேட்டியில், ``வாரிசு அரசியலை எதிர்த்துத் தொடங்கப்பட்ட இயக்கம் இன்று வாரிசிடமே அடமானம் வைக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகாலம் ரத்தம் சிந்தி உழைத்த எங்களைப் போன்ற தொண்டர்களை துரை வைகோ கேவலமாக நடத்துகிறார்.

வைகோ - மார்கோனி
வைகோ - மார்கோனி

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் நாங்கள் எப்போதோ ஆளுங்கட்சியில் சேர்ந்திருப்போம். ஆனால், கொள்கைக்காக நின்ற எங்களை துரை வைகோ மதிப்பதில்லை.

திருச்சியில் போட்டியிட்ட போது 'செத்தாலும் தனிச் சின்னத்தில்தான் நிற்பேன்' என்று கூறி தீப்பெட்டிச் சின்னத்தில் வென்ற துரை வைகோ, இன்று சீர்காழி உள்ளிட்ட இடங்களில் தோல்வி பயத்தின் காரணமாக தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க வேண்டிய கட்டாயத்திற்கு ம.தி.மு.க தள்ளப்பட்டுள்ளது. இது அந்த இயக்கத்தின் அடையாளத்தை அழிக்கும் செயல். ஒரு பிரதமரையே எதிர்த்து கேள்வி கேட்ட வைகோவின் கம்பீரம் இன்று தி.மு.க-விடம் அடமானம் வைக்கப்பட்டுவிட்டது.

சில மாதங்களுக்கு முன்பு வைகோவின் கை முறிந்ததாக செய்தி வந்தது. அதற்கு காரணம் துரை வைகோ. அப்பா - மகன் இடையே கடும் மோதல் நிலவுகிறது. தி.மு.க கூட்டணி வேண்டாம் என துரை வைகோ பேசியதாகவும், அதற்கு வைகோ மறுப்பு தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வாக்குவாதத்தில்தான் வைகோவை, துரை வைகோ தாக்கியதாகவும், அதில் வைகோவின் கை முறிந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், வைகோ கழிவறையில் விழுந்து கை உடைந்ததாக செய்திகள் வந்தன.

துரை வைகோ
துரை வைகோ

வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டு, அவர் குடும்பத்தையே துரை வைகோ நடுத்தெருவில் நிறுத்தியுள்ளார். தற்போது துரை வைகோவின் நடவடிக்கைகள் வைகோவின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளன. இது குறித்து மத்திய உளவுத்துறையும் தமிழக காவல்துறையும் உரிய விசாரணை நடத்த வேண்டும். நான் அந்தக் கட்சியை விட்டுவந்து மூன்று வருடம் ஆகிறது. அதற்குப் பிறகு அந்தக் கட்சிகுறித்து நான் பேசியதே கிடையாது. இப்போது பேசுகிறேன் என்றால், அந்தளவு சூழல் மோசமாகிவிட்டது.

சீர்காழியில் ம.தி.மு.க-விற்கு என்று இப்போது ஒரு கிளைச் செயலாளர் கூட இல்லை. அனைவரும் என்னோடு அ.தி.மு.க-விற்கு வந்துவிட்டார்கள். தென்சென்னை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் துரை வைகோவின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்து வெளியேறி வருகின்றனர். துரை வைகோ ஒரு 'கார்ப்பரேட் ரவுடி' போல நிர்வாகிகளை நடத்துகிறார்.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது மற்றும் மாவட்டப் பிரிப்பு போன்ற ஆக்கபூர்வமான பணிகளுக்காகவே நான் எடப்பாடி பழனிசாமி அவர்களோடு பயணிக்க முடிவெடுத்தேன். உண்மையான உழைப்பிற்கு அ.தி.மு.க-வில் அங்கீகாரம் கிடைக்கிறது." என்றார்.

'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் சீனா

அமெரிக்கா - ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது.இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது.ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி,... மேலும் பார்க்க

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க