செய்திகள் :

"ஜனநாயகன் படத்தை வெளியிட விடாம கூட்டு சூழ்ச்சி பண்ணிட்டாங்க.!" - திருச்சியில் விஜய்

post image

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

அந்தவகையில் மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து திருச்சியில் பிரசாரம் செய்த விஜய், "கேஸ் பிரச்னை எல்லாம் சரி ஆகிடுச்சா? டீ, கடை, ஹோட்டல்கள் எல்லாம் மூடிட்டாங்க. கேஸ் தட்டுபாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

ஸ்டாலின் சார் வீட்டில பிரச்னைன்னா டெல்லி போய்விட்டு வருவாரு. கேஸ் பிரச்னைக்காக டெல்லி போய்விட்டு வரலாம்-ல.

நீட் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகள் என்ன ஆச்சு. எதையெல்லாம் செய்ய முடியாதோ?

அதை தான் ஸ்டாலின் வாக்குறுதியா கொடுப்பாரு. அவரை மாதிரி பொய் வாக்குறுதி கொடுக்காமல் மக்களோட தேவைகளை அறிந்து செயல்படுவோம்.

அடிப்படை வசதிகளை செய்யாத தீய சக்தி திமுகவை தூக்கி வீசிறிடலாமா? இளைஞர்களோட வேலைவாய்ப்பை பறிச்சது திமுக தான்.

நகராட்சியில தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்காமல் லஞ்சம் பெற்ற அமைச்சர் திருச்சியில இருக்கார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

கரூர் சம்பவம் ஒரு சூழ்ச்சினு நிறைய பேர் சொல்றாங்க... அது மாதிரி ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் இருப்பது கூட்டு சூழ்ச்சி. இந்தத் தேர்தல்ல ஜனநாயகன் படம் மிகப்பெரிய ஆயுதமாக மாறிவிடுமோ என பயந்து சூழ்ச்சி பண்ணிட்டாங்க. திமுகவையும் நம்பாதீங்க, பாஜகவையும் நம்பாதீங்க. யூஸ்லெஸ் அரசு இது. ஒரே ஒரு வாய்ப்பு எனக்கு கொடுங்க." என்றார்.

மயிலாடுதுறை: `எப்போ இடிஞ்சு விழும்னு தெரியலை' - அச்சுறுத்தும் பாலம்... மக்களின் திக்... திக் பயணம்!

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட எரவாஞ்சேரி கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவ்வூரையும் இலுப்பூரையும் இணைப்பதற்கு 90-களில் வீரசோழ... மேலும் பார்க்க

`ஏமாத்திட்டீங்களே' செந்தில் பாலாஜியிடம் புலம்பிய MLA டு `எனக்கே கொடுங்க' கேட்கும் அமைச்சர் | கழுகார்

செந்தில் பாலாஜியிடம் புலம்பிய எம்.எல்.ஏ!"என்னை ஏமாத்திட்டீங்களே..."கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி எம்.எல்.ஏ சிவகாமசுந்தரிக்கு வரும் தேர்தலில் அதே தொகுதியைப் பெற்றுத் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தாராம்... மேலும் பார்க்க

ஈரோடு: முதல்வர் ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் | Photo Album

ஈரோடு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்ஈரோடு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்ஈரோடு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்ஈரோடு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்ஈரோடு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் ... மேலும் பார்க்க

தேர்தல் 2026 : `குற்றப்பத்திரிக்கை' வியூகம் - மாநிலத் தேர்தல்களில் பாஜகவின் திட்டம் மலருமா?

தமிழ்நாடு, அஸ்ஸாம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் என 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் தனக்கான ஒரு பிரசார வியூகத்தை வகுக்கும். அதன் அடிப்படையில் பா.ஜ.க-வின் தேர... மேலும் பார்க்க

'சார் ஒரு 5 நிமிசம் புட்டேஜ் வேணும்;இன்னொரு தடவை.!' - சீட்டுக்காக சத்யமூர்த்தி பவனில் கதர்களின் ரகளை

காங்கிரஸையும் கோஷ்டி மோதலையும் பிரிக்கவே முடியாது. திமுகவிடம் தொகுதிகளை இறுதி செய்ய வேண்டி டெல்லிக்கு அடிக்கடி பறந்து வந்த செல்வப்பெருந்தகை இப்போது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய டெல்லிக்கு பறந்தபடி இ... மேலும் பார்க்க