செய்திகள் :

'மதுரைக்குள் போஸ்டர்கள் ஒட்டக் கூடாது' - போஸ்டர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மாநகராட்சி

post image

மதுரை பலவற்றுக்கு பெயர் பெற்றிருந்தாலும் மதுரையில் ஒட்டப்படும் அரசியல் போஸ்டர்கள், பிறந்தநாள் போஸ்டர்கள், ரசிகர்களின் சுவரொட்டிகள், விழாக் காலங்களில் வைக்கப்படும் பேனர்கள் போன்றவற்றுக்குத் தனி கவனம் கிடைக்கும்.

100 வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சி போஸ்டர் கலாசாரத்தால் பல ஆண்டுகளாகவே அல்லல்பட்டு வருகிறது. போஸ்டர்களுக்குக் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகின்ற நிலையில், மதுரை மாநகராட்சிக் கூட்டரங்கில் இன்று மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், அறிவுறுத்தலின்படி, துணை ஆணையாளர் ஜெய்னுலாப்தீன் தலைமையில், மதுரை விளம்பர பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

இதில் மதுரை மாநகரின் தூய்மையையும், அழகையும் பாதுகாத்திடும் வகையில், மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நேற்று மதுரை விளம்பரப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாநகராட்சிப் பகுதிகளில் சுவர்கள், கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடை குறித்து சங்க உறுப்பினர்களுக்கு விளக்கப்பட்டது.

போஸ்டர் கலாசாரம்
போஸ்டர் கலாசாரம்

மேலும் தடையை மீறி சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள், சுவரொட்டிகளை அச்சிடும் அச்சகங்கள் மற்றும் இதில் தொடர்புடைய பிறர் மீது தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் (உருக்குலைப்புத் தடுப்பு) சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சங்க உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரின் தூய்மையையும், அழகையும் பேணும் வகையில், பொதுமக்கள் மற்றும் அனைத்து அமைப்புகளும் இத்தடையைக் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வாணியம்பாடி: திருமணத்துக்கு மறுத்த 17 வயது மாணவி கடத்தல்; தாய்மாமன் குடும்பத்தினர் 15 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவி, தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவியை அவரது தாய்மாமன் மகன் திருமணம் செய்ய விருப்பம் தெரிவி... மேலும் பார்க்க

'இந்தியா மீட்ட சோழர்கால செப்பேடுகள்'- எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கையும் - மத்திய அமைச்சரின் பதிலும்!

நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட சோழர் கால லெய்டன் செப்பேடுகளைத் தமிழ்நாட்டில் நிரந்தரமாகக் காட்சிப்படுத்த வேண்டும் என எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்திருந்த நிலையில், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர்... மேலும் பார்க்க

செழிப்பான மாண்புமிகுக்கள்; கடுகடு MLA-க்கள் டு யூடியூபர் குறித்து சீமானுக்கு பறந்த புகார் | கழுகார்

கண்காணிக்கச் சொன்ன தலைமை!கப்சிப் எம்.எல்.ஏ-க்கள்...ஆட்சியைக் கவிழ்க்க திராவிட கட்சிகள் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாக குற்றஞ்சாட்டி வருகிறது த.வெ.க. 'எங்களிடம் த.வெ.க-வுக்கு எதிராக திரும்பச... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து தாக்குதல்கள்: மாயமான 2 சிறப்புக் காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் தொலைதூரப் பகுதியான டச்சான் (Dachhan) வட்டாரத்தில் உள்ள கியார் கிராமத்தில், உள்ளூர் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையில் (SOG) பணியாற்றி வந்தவர்கள் பாபி சந்த் ... மேலும் பார்க்க

இந்தோனேசியா: `கல்வித் தகுதியில் சிக்கல்' - துணை அதிபர் ராஜினாமா! - நிகழ்வும் அரசியல் பின்னணியும்!

இந்தோனேசியா அதிபர் தேர்தல்!இந்தோனேசிய முன்னாள் அதிபர் ஜோகோ விடோடோவின் மகன் ஜிப்ரான். இவர் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்காக போட்டியிட்டார். இந்தோனேசியச் சட்டப்படி, து... மேலும் பார்க்க

`40% ஒட்டுக்களை குறி' - உ.பி.தேர்தலில் பட்டியலின கட்சியுடன் கைகோர்க்கும் அசாசுதின் ஒவைசி

உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே நடந்து வருகிறது. சமாஜ்வாடி கட்சியுட... மேலும் பார்க்க