செய்திகள் :

மதுரை: தண்டனை அறிவிக்கப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்திலிருந்து தப்பியோட்டம்; தேடிப் பிடித்த போலீஸ்

post image

கடந்த 2024 மே 20 ஆம் தேதி திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையின்போது  ஆட்டோவில் 30 கிலோ கஞ்சா கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.  

இதையடுத்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணி, மதன்குமார், மதுபாலன் , தாமரைக்கண்ணன், மாதவன், ராஜா ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கானது மதுரை மாவட்டம் முதலாவது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று  நீதிபதி சுதாகர் முன்பாக  இறுதி கட்ட விசாரணை முடிவடைந்து 6 பேரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா 10 வருட சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து  உத்தரவிட்டார்.

இந்நிலையில் தண்டனை விபரங்களைக் கேட்ட சிறிது நேரத்தில் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த ராஜா அங்கிருந்து நைசாக நழுவி தப்பியுள்ளார்.

மதுரை மாவட்ட நீதிமன்றம்
மதுரை மாவட்ட நீதிமன்றம்

இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் குற்றவாளி ராஜாவைத் தேடிய நிலையில் ராஜா தப்பியோடியது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து  மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்துநிலையம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ராஜாவைத் தீவிரமாகத் தேடினர்.

இதையடுத்து திண்டுக்கல் அருகே தப்பியோடிய குற்றவாளியான ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை நகைக்கடையில் தனியாளாகக் கொள்ளை; அதிர வைத்த திருடன்; 9 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை

மதுரை பழங்காநத்தம் பைபாஸ் நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் தனிஷ் நகைக் கடை கடந்த மாதம் 14 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை நகைக் கடையைத் திறந்து பார்த்தபோது விற்பனைக்காக வைக்கப்ப... மேலும் பார்க்க

சேலம்: ரூ.1,000 கமிஷனுக்கு ஆசை; 7500 மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.75 கோடி மோசடி; என்ன நடந்தது?

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி, சின்ன திருப்பதி பகுதிகளைச் சேர்ந்த சிலர், தாங்கள் சமூக சேவை செய்யும் பெஸ்ட் எம்பவர்மென்ட் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருவதாகக் கூறி சேலம், நாமக்கல், தர்மபுரி உ... மேலும் பார்க்க

பாமக நிர்வாகி கொலை: ``இப்படிச் சொல்ல அமைச்சருக்கு வெட்கமாக இல்லையா?" -ராஜ்மோகனுக்கு திலகபாமா கண்டனம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள சேங்குன்றம் கிராமத்தில் கடந்த 9-ம் தேதி மாலை, ஞானவேல் என்ற பா.ம.க பிரமுகர் அதே பகுதியைச் சேர்ந்த ரௌடியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், பா.ம.க பொருளாள... மேலும் பார்க்க

``இனி Nvidia-வின் நிர்வாகக் குழுவிலும் இருக்கமாட்டார்" - ராஜினாமாவை அறிவித்த CEO ஜென்சன்

உலகப் புகழ்பெற்ற ‘என்விடியா’ (Nvidia) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கணினி சிப் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங். இவர் தனது மனைவி லோரி ஹுவாங்கை திருமணம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் திடீர் தரிசனம்; சோகமாகக் காணப்பட்ட தவெக MLA அருள் விக்னேஷ்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விரும்பத்தகாத குறுஞ்செய்தியை அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தி.மு.க ... மேலும் பார்க்க