'குழி தோண்டி நீச்சல் குளத்தைச் சேதப்படுத்திட்டாங்க' - ஜெம் வீரமணி குடும்ப வக்கீல...
மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: Instagram Influencer-ஆன இளம்பெண் கைது செய்யப்பட காரணம் என்ன?
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் 15 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகளை தனிநபர் முகமுடி ஒருவன் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கொள்ளையனைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் இரவு பகலாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
கடையில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள பட்டதாரி இளைஞர் ஒருவரின் வீட்டில் சந்தேக அடிப்படையில் மதுரை தெற்கு துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று மாலை சோதனையில் ஈடுபட்டனர்.

பட்டதாரி இளைஞர் தலைமறைவாக உள்ள நிலையில் காவல்துறையினர் இளைஞரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பட்டதாரி இளைஞரின் தந்தை சுரேஷ், இளைஞரின் நண்பரும் இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சருமான மீனாட்சி என்ற பெண் ஆகியோர் கைது செய்யபட்டுள்ளனர்.
மீனாட்சி இதற்கு முன் மொபைல்போன் பற்றிய வீடியோக்களை வெளியிடும் பிரபல யூடியூப் சேனலில் வேலை பார்த்து வந்துள்ளார். சிசிடிவி கேமராக்களைப் பற்றி நன்கு தெரிந்தவர். இவர் நேரடியாகக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடவில்லையென்றாலும் நகைப்பையை வாங்கி வைத்தற்காகக் கைது செய்யபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.











