செய்திகள் :

`மாணவர்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு' - சாதி பெயருடன் ஐ.டி கார்டு விவகாரம்; விளக்கமளித்த செங்கோட்டையன்

post image

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சாதி பெயரையும் குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்க அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஈரோட்டில் பேசியது சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப்‌ பேசிய அமைச்சர் செங்கோட்டையன், " வருவாய்த்துறையைப் பொறுத்தவரையில், பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மாணவர்களின் முகவரி, ரத்த வகை , ஆதார் அட்டை மற்றும் கல்வித் தகுதி போன்ற விவரங்களை உள்ளடக்கிய 'டேட்டா' அடையாள அட்டை வழங்கலாமா என்பது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். முன்பெல்லாம், 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வருவாய்த்துறையின் மூலமாக ஆசிரியர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் (வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ் போன்றவை) வழங்கும் வழக்கம் இருந்தது.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

கடந்த ஐந்து ஆண்டு காலமாக இந்த நடைமுறை இருந்து வருகிறது. இதற்கு முன்னால் மாணவர்கள் வருவாய்த்துறை அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளர் ஆகியோரைத் தேடிச் சென்றுதான் சான்றிதழ்களைப் பெற முடிந்தது. ஆனால், இப்போது வருவாய்த்துறையே நேரடியாகப் பள்ளிகளுக்குச் சென்று அந்தப் பணிகளைச் செய்து வருகிறது. அதேபோல், தற்போது பள்ளிக்கல்வித்துறையும் வருவாய்த்துறையும் இணைந்து, மாணவர்களின் முகவரி, கல்வித் தகுதி மற்றும் ஆதார் அட்டை விவரங்களை உள்ளடக்கிய தரவுகளை அடையாள அட்டையாக வழங்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குத் தேவைப்படும் சான்றிதழ்களை வழங்கும் பணி கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்தும் நடைபெறும். ஆனால், இந்த புதிய 'டேட்டா கார்டில்' சாதி அடிப்படையில் எந்த விவரமும் இடம்பெறாது.

பள்ளிகளில் வழங்கப்படும் இந்த அட்டையில் சாதியைக் குறிப்பிட்டால், அது மாணவர்களிடையே ஒருவித பாகுபாட்டையோ அல்லது மனவருத்தத்தையோ ஏற்படுத்தலாம். அனைவரும் ஒரே மதம், சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற எண்ணத்தில்தான் பள்ளியில் குழந்தைகள் படிக்கிறார்கள். எங்களது இயக்கமும் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கமாகும். எனவே, மாணவர் நலன் கருதியே இந்தத் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது. மாணவர்களின் எதிர்பாராத விபத்துகள் ஏற்படும்போது இந்த முகவரி மற்றும் ஆதார் விவரங்கள் மூலம் அவர்களுக்கு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கும் இது ஏதுவாக அமையும். அதேபோல், வெளியூர்களுக்குச் சென்று திரும்பும்போது அவசரத் தேவைகளுக்கு மற்றவர்களைத் தொடர்பு கொள்ளவும் இது பயனுள்ளதாக இருக்கும்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

இதை மட்டும்தான் நாங்கள் செய்யப் போகிறோம். சில ஊடகங்களில், இது சாதிச் சான்றிதழுடன் இணைக்கப்படப் போவதாகச் செய்திகள் வந்துள்ளன. ஆனால், சாதி விவரங்கள் இதில் எப்போதும் இணைக்கப்படப் போவதில்லை. அனைவரும் ஒன்றுதான், எல்லாரும் ஒன்றாக வாழ வேண்டும் என்ற நோக்கில்தான் நம்முடைய கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கிறது. எனவே, முகவரி, ரத்த வகை, ஆதார் எண் போன்ற 'டேட்டா'க்கள் மட்டுமே இதில் இருக்கும். 10, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இதனை எப்படிச் செயல்படுத்தலாம் என்பது குறித்து இரு துறைகளும் இணைந்து விரைவில் ஆய்வு செய்ய இருக்கிறோம்" என்றார்.

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க