செய்திகள் :

`தமிழ்நாட்டில் தகுதியான பலர் இருக்கையில்..!' - டெல்லி பிரதிநிதி நியமனம்; விளக்கம் கேட்கும் பிரேமலதா!

post image

தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட நாராயணாவை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு. இவர் ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக திரு.வெங்கடநாராயணா அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை தேமுதிக சார்பில் கடுமையாக கண்டிக்கிறோம்.

பிரேமலதா அறிக்கை
பிரேமலதா அறிக்கை

ஏற்கனவே கர்நாடக மாநில முதலமைச்சர் திரு.டி.கே.சிவக்குமார் மற்றும் அங்குள்ள நீர்வளத்துறை அமைச்சர் “எங்கள் மாநில எல்லைக்குள் மேகதாது அணையை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது" என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவேரி நீர் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், மேகதாது அணை தொடர்பாகவும் தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உச்சநீதிமன்றமும், காவேரி மேலாண்மை தொடர்பான அமைப்புகளும் இந்த விவகாரத்தில் சட்ட மற்றும் நிர்வாக வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நிலையிலும், கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் உறுதியாக இருப்பதாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது.

இத்தகைய சூழலில், கர்நாடக பின்னணியை கொண்ட ஒருவரை தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இது "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது" போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான நபர்கள் பலர் இருக்கையில், ஏன் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

எனவே, தமிழக அரசு இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்து, திரு.வெங்கடநாராயணா அவர்களின் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம்".

டெல்லி பிரதிநிதி சர்ச்சை: 'தவெகவில் ஒருவர்கூட தகுதியானவர் இல்லையா?' - கனிமொழியின் இரண்டு கேள்விகள்!

ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணனை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துள்ளது, தவெக அரசு. இதையொட்டி, தமிழ்நாடு அரசிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரண்டு கேள்விகளை எழுப... மேலும் பார்க்க

ஐதராபாத் சாலைக்கு 'டொனால்ட் ட்ரம்ப்' பெயர்: 'இப்படி கௌரவிக்கப்படும் முதல் அதிபர்' - ட்ரம்ப் பெருமை

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 23, 2026), தெலுங்கானா ஐதராபாத்தில் சாலை ஒன்றிற்கு 'டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ' என்று பெயரிடப்பட்டுள்ளது.அமெரிக்கத் தூதரகம் அமைந்திருக்கும் அந்தச் சாலைக்கு முன்பு, 'அமெரிக்கத்... மேலும் பார்க்க

அதிமுக-வில் புதிய பதவி கிடைத்தும் எஸ்.பி.வேலுமணி அப்செட் – காரணம் என்ன?

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கட்சி பதவிகள் பறிக்கப்... மேலும் பார்க்க

வெங்கட நாராயணா நியமனம்: 'மேகதாது அணைக்கு எதிராகப் போராடுகையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே.!' - சீமான்

ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா . இவரை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துள்ளது தவெக அரசு.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்... மேலும் பார்க்க

'தமிழகத்துக்கு சம்பந்தமே இல்லாதவரை எப்படி.?' - டெல்லி பிரதிநிதி நியமனத்துக்கு நயினார் எதிர்ப்பு

தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகக் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா வை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெள... மேலும் பார்க்க