செய்திகள் :

ஐதராபாத் சாலைக்கு 'டொனால்ட் ட்ரம்ப்' பெயர்: 'இப்படி கௌரவிக்கப்படும் முதல் அதிபர்' - ட்ரம்ப் பெருமை

post image

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 23, 2026), தெலுங்கானா ஐதராபாத்தில் சாலை ஒன்றிற்கு 'டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ' என்று பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதரகம் அமைந்திருக்கும் அந்தச் சாலைக்கு முன்பு, 'அமெரிக்கத் தூதரக சாலை' என்று பெயர் இருந்தது.

அதை மாற்றி தான் இப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பை குறிக்கும் வகையில் 'டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தச் சாலை அமைந்திருக்கும் பகுதியில் தான் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாலை பெயர் திறப்பு விழா
சாலை பெயர் திறப்பு விழா

சாலைக்குப் புதிய பெயர் வைக்கும் நிகழ்வில் இந்தியாவிற்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதர் செர்ஜியோ கர் கலந்துகொண்டு பெயர் பலகையைத் திறந்து வைத்தார்.

பெயர் காரணம் என்ன?

இந்தப் பெயர்‌ மாற்றம் குறித்து தெலுங்கானா அரசு, "இது அமெரிக்காவிற்குச் செலுத்தப்படும் ஒரு மரியாதையாகவும், அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவில் ஹைதராபாத்தின் வளர்ந்து வரும் முக்கியப் பங்கிற்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.

ட்ரம்பின் 'நன்றி'

சாலைக்கு தனது பெயர் வைத்ததற்கு நன்றி தெரிவித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "இந்தியாவின் ஹைதராபாத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய 'டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ' - இந்த வகையில் கௌரவிக்கப்படும் முதலாவது அமெரிக்க அதிபர் நான். மிக்க நன்றி!" என்று பதிவிட்டுள்ளார்.

`தமிழ்நாட்டில் தகுதியான பலர் இருக்கையில்..!' - டெல்லி பிரதிநிதி நியமனம்; விளக்கம் கேட்கும் பிரேமலதா!

தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட நாராயணாவை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு. இவர் ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொதுச்செயல... மேலும் பார்க்க

டெல்லி பிரதிநிதி சர்ச்சை: 'தவெகவில் ஒருவர்கூட தகுதியானவர் இல்லையா?' - கனிமொழியின் இரண்டு கேள்விகள்!

ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணனை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துள்ளது, தவெக அரசு. இதையொட்டி, தமிழ்நாடு அரசிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரண்டு கேள்விகளை எழுப... மேலும் பார்க்க

அதிமுக-வில் புதிய பதவி கிடைத்தும் எஸ்.பி.வேலுமணி அப்செட் – காரணம் என்ன?

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கட்சி பதவிகள் பறிக்கப்... மேலும் பார்க்க

வெங்கட நாராயணா நியமனம்: 'மேகதாது அணைக்கு எதிராகப் போராடுகையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே.!' - சீமான்

ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா . இவரை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துள்ளது தவெக அரசு.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்... மேலும் பார்க்க

'தமிழகத்துக்கு சம்பந்தமே இல்லாதவரை எப்படி.?' - டெல்லி பிரதிநிதி நியமனத்துக்கு நயினார் எதிர்ப்பு

தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகக் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா வை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெள... மேலும் பார்க்க