செய்திகள் :

'பிரியா விடை நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக.!' - டெல்லி பிரதிநிதிக்கு தினகரன் எதிர்ப்பு

post image

'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவை தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்துள்ளது பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை...

"தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா அவர்களை நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள்.

வெங்கட நாராயணா
வெங்கட நாராயணா

தன்னுடைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு, திரையுலகிலிருந்து தனக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக திரு வெங்கட் கே நாராயணா அவர்களுக்கு தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள்.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பாலமாக இருந்து, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அதிமுக்கியத்துவமிக்க பதவியான டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு விளக்கியே ஆக வேண்டும்.

எனவே, மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கத்தானே தவிர, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் அரசு உயர் பதவியைத் தூக்கிக் கொடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல என்பதை இனியாவது உணர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக திரு வெங்கட் கே நாராயணா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்".

அதிமுக-வில் புதிய பதவி கிடைத்தும் எஸ்.பி.வேலுமணி அப்செட் – காரணம் என்ன?

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கட்சி பதவிகள் பறிக்கப்... மேலும் பார்க்க

வெங்கட நாராயணா நியமனம்: 'மேகதாது அணைக்கு எதிராகப் போராடுகையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே.!' - சீமான்

ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா . இவரை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துள்ளது தவெக அரசு.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்... மேலும் பார்க்க

'தமிழகத்துக்கு சம்பந்தமே இல்லாதவரை எப்படி.?' - டெல்லி பிரதிநிதி நியமனத்துக்கு நயினார் எதிர்ப்பு

தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகக் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா வை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெள... மேலும் பார்க்க

உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் அதிர்ச்சி: 14 எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே கட்சியில் சேர திட்டம்?

2022ம் ஆண்டில் இருந்து சிவசேனாவிற்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே இருக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக 2022ம் ஆண்டு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா இரண்டாக உடைந்தது... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்களின் ID கார்டில் சாதி பெயர்? - செங்கோட்டையன் பேசியது என்ன?

நேற்று (ஜூன் 26, 2026) கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன்.அப்போது அவர் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டை குறித்து பேசியதாவது..."பள்ளி மாணவ... மேலும் பார்க்க