செய்திகள் :

டெல்லி பிரதிநிதி சர்ச்சை: 'தவெகவில் ஒருவர்கூட தகுதியானவர் இல்லையா?' - கனிமொழியின் இரண்டு கேள்விகள்!

post image

ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணனை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துள்ளது, தவெக அரசு. இதையொட்டி, தமிழ்நாடு அரசிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரண்டு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

"இரண்டு கேள்விகள் தான் எழுகின்றன.

1. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?

2. மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்னைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?"

`தமிழ்நாட்டில் தகுதியான பலர் இருக்கையில்..!' - டெல்லி பிரதிநிதி நியமனம்; விளக்கம் கேட்கும் பிரேமலதா!

தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட நாராயணாவை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு. இவர் ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொதுச்செயல... மேலும் பார்க்க

ஐதராபாத் சாலைக்கு 'டொனால்ட் ட்ரம்ப்' பெயர்: 'இப்படி கௌரவிக்கப்படும் முதல் அதிபர்' - ட்ரம்ப் பெருமை

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 23, 2026), தெலுங்கானா ஐதராபாத்தில் சாலை ஒன்றிற்கு 'டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ' என்று பெயரிடப்பட்டுள்ளது.அமெரிக்கத் தூதரகம் அமைந்திருக்கும் அந்தச் சாலைக்கு முன்பு, 'அமெரிக்கத்... மேலும் பார்க்க

அதிமுக-வில் புதிய பதவி கிடைத்தும் எஸ்.பி.வேலுமணி அப்செட் – காரணம் என்ன?

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கட்சி பதவிகள் பறிக்கப்... மேலும் பார்க்க

வெங்கட நாராயணா நியமனம்: 'மேகதாது அணைக்கு எதிராகப் போராடுகையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே.!' - சீமான்

ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா . இவரை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துள்ளது தவெக அரசு.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்... மேலும் பார்க்க

'தமிழகத்துக்கு சம்பந்தமே இல்லாதவரை எப்படி.?' - டெல்லி பிரதிநிதி நியமனத்துக்கு நயினார் எதிர்ப்பு

தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகக் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா வை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெள... மேலும் பார்க்க