செய்திகள் :

மார்ச் 23, ஏப்ரல் 7 தேதிகளில் கச்சா‌ எண்ணெய் விலை சரிவு: ட்ரம்ப் அறிவிப்பு முன்னரே கசிந்ததா?

post image

கடந்த மார்ச் 23 மற்றும் ஏப்ரல் 7 தேதிகளில், கச்சா எண்ணெய் விலையின் 'திடீர்' வீழ்ச்சி குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளனர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

இந்த இரண்டு தேதிகளில், மார்ச் 23-ம் தேதி அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம். உடனடி தாக்குதல் நிறுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.

ஏப்ரல் 7-ம் தேதி இரண்டு வார போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

இப்படி இந்த அறிவிப்புகள் வரும்... இப்போது வரும் என்று எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஆனால், இந்த அறிவிப்புகள் வெளியாவதற்கு கிட்டத்தட்ட அரை‌ மணி நேரத்திற்கு முன்பு கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பெரியளவிலான தொகை வெளியேற்றப்பட்டிருக்கிறது.

இதனால், அதன் விலையும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இப்படி மார்ச் 23-ம் தேதி கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து 500 மில்லியன் டாலர் வெளியேற்றப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 7-ம் தேதி, 950 மில்லியன் டாலர்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றன.

இந்த வர்த்தகமும், இதனால் உண்டான எண்ணெய் விலை வீழ்ச்சியும் எப்படி சாத்தியம் என்றும், அறிவிப்பு குறித்த தகவல்கள் எப்படி கசிந்தன‌ என்று இரு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து விசாரிக்கவும் கோரியுள்ளனர்.

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க

TVK Vijay: "அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்.!"- தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்க... மேலும் பார்க்க

விருதுநகரில் வெற்றி வாகை சூடுவாரா விஜய பிரபாகரன்? - எப்படி இருக்கிறது களம்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில், தே.மு.தி.க-வின் மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்... மேலும் பார்க்க

'திமுக தோற்றால் கனிமொழி தனி கட்சி ஆரம்பிப்பார்!' - அண்ணாமலை ஆரூடம்

கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, ரத்தினபுரி பகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, “20... மேலும் பார்க்க