செய்திகள் :

மீண்டெழுந்த சரத்பவார், அகிலேஷ் யாதவ்: சட்டமேலவை தேர்தலில் நாக்பூர், வாரணாசியை இழந்த பாஜக

post image

கடந்த 23ம் தேதி மகாராஷ்டிர, கர்நாடகா, பீகார், உத்தரப்பிரதேசத்தில் காலியாக உள்ள சட்டமேலவை இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்பட்டது.

இதனால் வாக்குகளை எண்ணுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டது. நேற்று இரவுதான் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச முடிவுகள் வெளியானது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 11 இடங்களில் பா.ஜ.க 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தற்போது நடந்துள்ள தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த முறையை விட இம்முறை சமாஜ்வாதி கட்சி கூடுதலாக இரண்டு இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

சட்டமேலவை இருக்கும் சட்டமன்றத்தில் மட்டும் பட்டதாரிகள் தொகுதிகள், ஆசிரியர் தொகுதிகள் உண்டு. ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்த்து ஒரு தொகுதியாகக் கணக்கிடுவார்கள். பட்டதாரிகள் தொகுதி என்பது படித்து பட்டம் பெற்று மூன்று ஆண்டுகள் ஆன பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுவது ஆகும்.

இதேபோன்று ஆசிரியர் தொகுதியில் மூன்று ஆண்டுகள் ஆசிரியராக இருந்தவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். இதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் தாங்களாக வாக்காளர் பட்டியலில் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும்.

வாரணாசி பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று இருக்கிறார். ஆறு ஆசிரியர் தொகுதியில் 4 தொகுதியை பா.ஜ.கவும், 2 தொகுதியை சமாஜ்வாடியும் பிடித்துள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

பா.ஜ.கவின் தினேஷ் குமார் மீரட் பட்டதாரி தொகுதியையும், மன்வேந்திர பிரதாப் சிங் ஆக்ரா பட்டதாரி தொகுதியையும் பாஜக தக்க வைத்துக் கொண்டது. ஆசிரியர் தொகுதிகளில் லக்னோ, மீரட், பரேலி-மொராதாபாத், கோரக்பூர்-பைசாபாத் ஆகிய இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது.

இத்தேர்தல் முடிவுகள் சமாஜ்வாடி கட்சிக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நான்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில், மொத்தம் உள்ள 28 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 இடங்களைக் கைப்பற்றியது.

குறிப்பாக, கர்நாடகாவில் உள்ள நான்கு இடங்களிலும் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று, காங்கிரஸுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. பீகாரில், எட்டு இடங்களில் நான்கு இடங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றது. அதேவேளையில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஒரு இடத்தில் வெற்றி பெற்று மாநில மேலவையில் தனது முதல் இடத்தைப் பதிவு செய்தது.

மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க கூட்டணிக்கு இத்தேர்தல் பெரிய பின்னடைவாக அமைந்தது.

5 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 3 இடங்களில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி வெற்றி பெற்றது. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி புனே பட்டதாரிகள் தொகுதியில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் ஹர்ஷதா தேஷ்முக் கடும் போட்டிக்கிடையே வெற்றி பெற்றார். இதே போன்று அவுரங்காபாத் பட்டதாரிகள் தொகுதியில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரதாப் சிங் வெற்றி பெற்றார்.

இது தவிர பா.ஜ.க கோட்டையாகப் பார்க்கப்படும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சொந்த ஊரான நாக்பூரில் காங்கிரஸ் வேட்பாளர் அபிஜித் வஞ்ஜாரி வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்து மாறி மாறி முன்னிலையில் இருந்தனர். நாடு முழுவதும் நடந்த சட்டமேலவை தேர்தலில் நாக்பூரில் வெற்றி பெற்று காங்கிரஸ் தனது சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொண்டது.

அமராவதி ஆசிரியர் தொகுதியில் சிவசேனா(ஷிண்டே)வும், புனே ஆசிரியர் தொகுதியில் பா.ஜ.கவும் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் மறைந்த அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதேசமயம் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனக்கு செல்வாக்குள்ள பகுதியில் இரண்டு இடங்களைப் பிடித்து தனது செல்வாக்கை நிரூபித்துள்ளது. இது அஜித்பவார் மனைவியும், துணைமுதல்வருமான சுனேத்ரா பவாருக்குப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டைச் சுற்றிப் பார்க்க பாஸ்போர்ட் வந்தாச்சு! – ஸ்பெஷலான 'Philately Passport' பற்றி தெரியுமா?

பாஸ்போர்ட் என்றாலே வெளிநாட்டுப் பயணம் என்பதுதான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் வரலாறு, பாரம்பர்யம் மற்றும் சுற்றுலாத் தலங்களை வித்தியாசமான முறைய... மேலும் பார்க்க

`Sms கூட வரல...'- வாடிக்கையாளர்களின் கணக்குகளிலிருந்து ரூ.35 கோடி அபேஸ்? - உ.பி வங்கியில் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்களது வங்கிக் கணக்கில... மேலும் பார்க்க

ஊக்க மருந்து சர்ச்சை... ஆசிய போட்டியில் விளையாட தடை: 3 முறை தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் தற்கொலை!

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் நீரஜ் யாதவ். மாற்றுத்திறனாளியான இவர் வட்டு மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில் கலந்து கொண்டு வந்தார். ஆசிய அளவில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று முறை தங்... மேலும் பார்க்க

`நகைக்கடைகள் மட்டுமல்ல, நடைபாதையும் தங்கம்தான்...' துபாயின் அடுத்த பிரமாண்ட திட்டம்!

சுற்றுலாப் பயணிகளைக் கவரப் புதிய திட்டம்; இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்க ஏற்பாடு!தங்க நகைகள், பிரமாண்டக் கட்டடங்கள் என உலகையே வியக்கவைக்கும் துபாய், இப்போது மற்றொரு வித்தியாசமான திட்டத்துடன் கவனம் ஈர... மேலும் பார்க்க

கர்நாடகா சட்டமேலவை தேர்தல்: 4 இடங்களையும் பா.ஜ.க கூட்டணியிடம் இழந்த காங்கிரஸ்!

கர்நாடகா, பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமேலவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்தது. இதில் கர்நாடகாவில் 4 இடங்களுக்கு இத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வ... மேலும் பார்க்க

15 ஆண்டுகளில் 38 கொலைகள்... அதிர வைக்கும் நரமாமிச குற்றச்சாட்டு - உகாண்டாவை உலுக்கிய இளைஞரின் கைது!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், 2010 முதல் 2025 வரை 38 பேரைக் கொன்று அவர்களின் உடல்களைச் சாப்பிட்டதாகக் குற்றம்சாட்டப்படும் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ராணுவத் தளபதி மூஹூசி கைனெருகாபா அக்டோப... மேலும் பார்க்க