செய்திகள் :

'முதலமைச்சர் வந்தா நைட்டு வரை காத்திருக்கணுமா?' - ஆவேசமான மேயர் பிரியா

post image

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, 'முதல்வரின் கூட்டங்கள் குறித்து தனக்கு சொல்லப்படுவதே இல்லை' என ஆவேசமடைந்தார்.

மாமன்ற கூட்டம்
மாமன்ற கூட்டம்

துணை மேயர் மகேஸ் குமார் பேசுகையில், 'சைதாப்பேட்டை தொகுதியில் ஒரு பூங்கா புனரமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்திருக்கிறது. நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார். மண்டலக் குழு தலைவருக்கும் வார்டு கவுன்சிலருக்கும் தகவல் சொல்லவே இல்லை.

அதிகாரிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்' என்றார். உடனே கவுன்சிலர்கள் பலரும் எழுந்து எங்கள் வார்டுகளிலும் இதே நிலைமைதான். அரசு நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைப்பதே இல்லை. ஆணையர் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.

மேயர்
மேயர்

உடனே மேயர் பிரியா, 'கவுன்சிலர்களுக்கு மட்டும் இல்லை. எனக்கே அந்த நிலைமைதான். முதல்வர் ரிப்பன் பில்டிங்கில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், வெளியில் முதல்வரின் கூட்டத்தை புறக்கணிப்பதாக செய்திகள் வருகிறது. முதல்வர் வருகிறார் என்றால் எத்தனை மணிக்கு வருகிறார் என சொல்ல வேண்டாமா? முதல்வர் வருகிறார் என்பதற்காக இரவு வரை காத்திருக்க வேண்டுமா?

கவுன்சிலர்கள் மக்களின் குறைகளை கேட்டு அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டு ஒரு வேலையை செய்தால் அதை எம்.எல்.ஏக்கள் வந்து திறந்து வைப்பதா? எம்.எல்.ஏக்களும் மக்கள் பிரதிநிதிகள்தான். நாங்களும் மக்கள் பிரதிநிதிகள்தான். மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க விருப்பமில்லையெனில் மாநகராட்சியை கலைத்து விடுங்கள்' எனக் கோபமடைந்தார்.

அடுத்ததாக பேசிய துணை மேயர், 'பிரதமரின் நிகழ்ச்சிக்கு மேயருக்கு அழைப்பு வந்தது. அங்கே அவர் சென்றார். முதல்வரின் நிகழ்ச்சிக்கும் அழைத்தால் மரபுப்படி மேயர் வருவார்' எனக் கூறினார்.

TNPSC தேர்வுக்கு வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை உயர்த்த முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். போட்டித் தேர்வுகளின் கோரிக்கையை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை 5 ஆண்ட... மேலும் பார்க்க

'போலீஸ் கஸ்டடி வேண்டாம்; வீட்டு சாப்பாடு வேணும்!' - புன்னகையோடு புழலுக்கு திரும்பிய அன்பில்!

தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்கிய வழக்கில் நீதிமன்றத்தில் காவலில் புழல் சிறையில் இருக்கும் அன்பில் மகேஸை விசாரணைக்காக காவலில் எடுக்க போலீஸார் மனு போட்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு ம... மேலும் பார்க்க

'சட்டமன்றத்தில என் குரல் ஒலிக்கணும்'னு நிறைய பேர் விருப்படுறாங்க.!'- சீமான் கூறியதென்ன?

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "அதிமுகவும், திமுகவும் விலகி இடைத்தேர்தலில் என்னை ப... மேலும் பார்க்க

``இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவு நிலைப்பாடா?" - திமுக தலைவர் ஸ்டாலினின் பதில் என்ன?

பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பசும்பொன்னில் மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``விடுதலைப் போராட்டத்திற்குத் துணைநின்றவர். ஆங்கிலேய அடக்... மேலும் பார்க்க

``எடப்பாடியின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை" - அமைச்சர் ரமேஷ்

முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு நேற்று மதுரைக்குச் சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாலை 5:30 மணிக்கு மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்றார். அவர் சென்ற சில ந... மேலும் பார்க்க