செய்திகள் :

முதுமலையில் புலியை விரட்டிச் சென்ற சர்ச்சையும், அமைச்சர் வன்னிஅரசின் விளக்கமும்! என்ன நடந்தது?

post image

சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அண்மையில் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். மசினகுடி, பொக்காபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பழங்குடி மாணவர்களுடன் உட்கார்ந்து உணவும் சாப்பிட்டிருக்கிறார்.

அதேவேளையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் வனத்துறையினருடன் சென்ற அமைச்சர் வன்னி அரசு, அது தொடர்பான வீடியோக்களை இணையத்தில் ரீல்ஸாக பகிர்ந்திருக்கிறார். புலிகள் நடமாடும் காட்டில் புலியை விரட்டிச் செல்வது போன்று ரீல்ஸில் இடம்பெற்றிருப்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமைச்சர் வன்னி அரசு

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயற்கை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த ஊட்டி சாதிக் மற்றும் குழுவினர், " தமிழ்நாடு வனத்துறை விதிகளின்படி, சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளை நெருங்கவோ அல்லது சஃபாரி வாகனங்களிலிருந்து கீழே இறங்கவோ கூடாது. ஆனால், அமைச்சர் வன்னி அரசு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி வனத்துறையின் சட்டதிட்டங்களை மீறியிருக்கிறார்.

வனத்துறையின் கட்டுப்பாடுகளை ஒரு அமைச்சரே மீறுவது தவறான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. 1972-ம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் வனவிலங்குகளை நெருங்குவதைத் தடுக்கத் தவறியதற்காக அமைச்சருடன் சென்ற வனத்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முதுமலை புலிகள் காப்பகம் போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில், அரசியல் பதவி, செல்வாக்கு அல்லது சமூக அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவரும் பொருந்தக்கூடிய வனத்துறை விதிமுறைகளையும் பாதுகாப்பு நடைமுறைகளையும் மதிக்க வேண்டும்.

அமைச்சர் வன்னி அரசு பதிவிட்ட புலி

வனவிலங்குகளுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைத்து, இயற்கைச் சூழலின் சமநிலையைப் பாதுகாப்பதே இத்தகைய விதிமுறைகளின் முக்கிய நோக்கமாகும். சாதாரணக் குடிமக்கள் சட்ட விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பொது அதிகாரத்தில் இருப்பவர்களும் அதைவிட உயர்ந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்"என்றனர்.

இது குறித்து அமைச்சர் வன்னிஅரசிடம் பேசினோம், " இயற்கை மீது அதிக நேசம் கொண்டவன் நான். 10 ஆண்டுகளுக்கு மேலாக டிரெக்கிங் அனுபவம் இருக்கிறது. திடீரென புலியை பார்த்தோம். அடுத்த ஸ்பாட்டில் மீண்டும் பார்க்கலாம் என்கிற ஆவலில் தான் சென்றோம். ஆனால், பெரிய சர்ச்சை போல உருவாக்கி வைரலாக்கி வருகிறார்கள். புலியை நம்மால் விரட்ட முடியுமா?" என்றார்.

விளையாடும்போது மாயமான மூன்று சிறுவர்கள்; ஏரியில் சடலங்களாக மீட்பு - கள்ளக்குறிச்சி அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் வசித்து வரும் தங்கமணி என்பவரின் மகன்களான 11 வயது இமானுவேல் மற்றும் ஒன்பது வயது ஷாம் ஆபிரகாம் இருவரும், தோட்டப்பாடி பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு நே... மேலும் பார்க்க

`அமைச்சர் நிழ்ச்சியில் மின்தடை; அதற்கு திமுக தொழிற்சங்க அதிகாரிமீது நடவடிக்கையா?' - தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெகதீஷ்வரி பங்கேற்ற நிழ்ச்சியின் போது மின்தடை ஏற்பட்டதால், அதை காரணம் காட்டி இளமின் பொறியாளர் அண்ணாதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் `மிரட்டல்' தொனியில் ரீல்ஸ்; கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் வீடியோ சர்ச்சை!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும் த.வெ.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளருமான வ.காந்திராஜ் தனது அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம் காவல் நிலையத்தில் ஆய்வு என்ற பெயரில் நள்ளிரவில் உள்ளே சென... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: "ரீல்ஸ்க்காகவே கொண்டாடப்பட்ட ஒரு சூரசம்ஹார நிகழ்ச்சி" - சேகர்பாபு விமர்சனம்

திருச்செந்தூரில் நேற்று நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் ஆகம விதிகள் அதிகப்படியாக மீறப்பட்டிருப்பதாக முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்... மேலும் பார்க்க

ஐ.நா: `மரண தண்டனைக்குத் தடை விதிக்கும் தீர்மானம்' - எதிராக வாக்களித்த இந்தியா

உலக நாடுகளில் மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட வரைவுத் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில்... மேலும் பார்க்க

'கள்ள மௌனத்தை கலையுங்கள் முதல்வர் விஜய்!'

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட கலெக்டரை தொல்லை செய்யும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் அந்த எம்.எல்.ஏவ... மேலும் பார்க்க