செய்திகள் :

மும்பை CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான் கான் - நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு; பின்னணி என்ன?

post image

பாலிவுட் நடிகர் இம்ரான் கான் சமீபத்தில் மும்பையில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகவேண்டும் என்று கோரி நடத்திய போராட்டத்தில் தனது காதலியுடன் கலந்து கொண்டார். இதையடுத்து இம்ரான் கானும், அவரது காதலியும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இம்ரான் கானுக்கு அமெரிக்க குடியுரிமை மற்றும் வெளிநாட்டு இந்தியர் அடையாள அட்டையும் இருக்கிறது. அவர் முழுமையான இந்தியர் என்ற அடையாளம் கிடையாது. ஆமீர் கானின் உறவினரான இம்ரான் கான் மும்பை போராட்டத்தில் தனக்கு காயம் ஏற்பட்டதையும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் காக்ரோச் ஜனதா போராட்டத்தில் பங்கேற்றதற்காக வரும் 28ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறும்படி மும்பை போலீஸார் இம்ரான் கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இது குறித்து மும்பை போலீஸார் வெளியிட்டுள்ள செய்தியில்,''இந்தியக் குடிமகனாக இல்லாத நிலையிலும் போராட்டத்தில் பங்கேற்றதற்காக, இமிகிரேசன் சட்டத்தின் தொடர்புடைய பிரிவின் கீழ் இம்ரான் கான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டம், 2025'-ன் விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் 7 வது பிரிவு இந்தியாவில் வெளிநாட்டவர்களின் வருகை, வெளியேற்றம், இருப்பு அல்லது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவோ, வரையறுக்கவோ அல்லது தடைசெய்யவோ தேவையான உத்தரவுகளையோ, வழிகாட்டுதல்களையோ அல்லது அறிவுறுத்தல்களையோ பிறப்பிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.

முன்னதாக மும்பை பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான கிரீத் சோமையா மும்பை போலீஸாரிடம் கொடுத்திருந்த புகாரில் இம்ரான் கான் சட்டவிரோதமான அரசியல் போராட்டத்தில் பங்கேற்றதாகவும், வெளிநாட்டு வாழ் இந்தியர் சட்ட விதிமுறைகளையும் விசா நிபந்தனைகளையும் மீறியுள்ளதாகவும் குறிப்பிட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரி இருந்தார்.

மும்பை போராட்டத்தில் பங்கேற்றது குறித்து இம்ரான் கான் அளித்த பேட்டியில், தான் மும்பையின் ஒரு குடிமகனாகவே இந்த இடத்திற்கு வந்ததாகவும், எந்தவொரு குறிப்பிட்ட கோரிக்கையுடனும் வரவில்லை என்றும் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,'' எனக்கு எந்தக் கோரிக்கைகளும் இல்லை. நான் ஒரு குடிமகனாக, இந்த நகரத்தில் வசிக்கும் ஒரு நபராகத்தான் இங்கே வந்திருக்கிறேன். மக்களின் நடமாட்ட சுதந்திரம் ஏன் கட்டுப்படுத்தப்படுகிறது? மக்களின் குரல்கள் ஏன் ஒடுக்கப்படுகின்றன? இதைப் புரிந்துகொள்ளவே நான் இங்கே வந்திருக்கிறேன்,” என்று கூறினார்.

'ஸ்டாலின் குறிவைத்து தோற்கடிக்கப்பட்டிருக்கிறார், தொகுதி மாறி நிற்கச் சொல்லி அப்போதே.!'- திருமாவளவன்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று இந்திய கூட்டணி சார்பில் சென்னையில் இன்று (அக்.15) ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் தொல். திரு... மேலும் பார்க்க

ரஷ்யப் போரில் உக்ரைனை ஆபத்தில் தள்ளியதா Starlink? உக்ரைனின் குற்றச்சாட்டும் SpaceX நடவடிக்கையும்!

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவைகளின் வேகத்தைக் குறைத்து உக்ரைனின் ராணுவ நடவடிக்கைகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது உக்ரைன் அரசு.உக்ரைனுக்கு என்ன பாதிப்பு? இதுவரை வெளியாகி... மேலும் பார்க்க

'லண்டன், ஆந்திரா போல உள்ளூர் மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க.!'- முதல்வரை விமர்சித்த ஸ்டாலின்

சமீபகாலமாக அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.55-லிருந்து ரூ.75 வரை உயர்ந்துள்ளதும், சமையல் எண்ணெய்,... மேலும் பார்க்க

திமுக ட்விஸ்ட் - உஷாராகும் இலைக்கட்சி புள்ளிகள் - 'துரோகி...' முழங்கத் தயாராகும் தி.மு.க!| கழுகார்

தி.மு.க மறுசீரமைப்பில் ட்விஸ்ட்!மாவட்டச் செயலாளர் தேர்தல் ரத்துமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலால் கைவிடப்பட்டிருந்த தி.மு.க மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. 'சீன... மேலும் பார்க்க

'ஏன் நாட்டை சீரழிக்கிறீர்கள்?' - CJP தலைவர் அபிஜித்துடன் வாக்குவாதம் செய்த மர்மநபர்

காக்ரோச் ஜனதா கட்சியினர் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து டெல்லியில் போராட்டம் நடந்த ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டம் நடைபெறும... மேலும் பார்க்க