``திமுக போல விருந்து போட்டு சாப்பிட்டு விட்டுபோகும் கூட்டம் அல்ல" - எடப்பாடி பழன...
மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 4,528 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,976 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,528 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க |தூத்துக்குடி மீனவர்கள் 6 பேர் மாயம்
கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்குதிறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 600 கன அடியில் இருந்து வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.20 அடியிலிருந்து 110.37 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 78.93 டிஎம்சியாக உள்ளது.