செய்திகள் :

ராஜ ராஜ சோழனின் 1,041-வது சதய விழா - விழாக்கோலத்தில் தஞ்சாவூர் பெரிய கோயில்!

post image

தஞ்சாவூர் பெரிய கோயில் உலக புகழ் பெற்று திகழ்ந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் வானுயுரந்த விமான கோபுரத்துடன் பிரமாண்டமாக காட்சியளிக்கும் பெரிய கோயில் கட்டுமானம் குறித்து இன்றைக்கும் உலகமே வியந்து அதிசயித்து பேசி வருகிறது. தமிழர்களின் அடையாளமான தஞ்சாவூர் பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜ ராஜ சோழன் பிறந்த நாள், சதய விழாவாக ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ராஜ ராஜ சோழன் சதய விழா

அதன்படி இன்றும், நாளையும் 1,041வது சதய விழா வெகு விமர்சையாக அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பெரிய கோயில் மட்டுமன்றி தஞ்சை நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. அலங்கார நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டன. இதனால் நகரமே அழகு ஜொலிக்க காட்சியளிக்கிறது. சதய விழாவுக்காக நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரிய கோயில் வளாகத்தின் இடது புறத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கில் திருமுறை மங்கள இசையுடன் விழா தொடங்கியது. இதில் மாவட்ட ஆட்சியர் ரேவதி, எம்.எல்.ஏ விஜய் சரவணன், சதய விழா குழுத் தலைவர் சரவணன், அறங்காவலர் போன்ஸ்லே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், கவியரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக மாமன்னன் ராஜ ராஜ சோழனின் நகர்வலம் நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரிய கோயில் சதய விழா

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் இருந்து குதிரைகள் பூட்டிய ரதத்தில் தமிழர்களின் பாரம்பர்யத்தையும் பண்பாட்டையும் உணர்த்தும் வகையில், நூற்றுக்கணக்கான நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் கொம்பு இசை, கரகம், தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என இசைத்தபடி ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக பெரியகோயிலுக்கு வந்தனர்.

இன்று மாலை 1,041 பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சதய விழாவின் இரண்டாம் நாளான நாளை, அரசு சார்பில் மாமன்னன் ராஜ ராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள். சதய விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவதால், தஞ்சாவூர் விழாக்கோலத்தில் களைக்கட்டியுள்ளது.

மதுரை: கோவிலிலிருந்து பள்ளிவாசலுக்கு சீர்வரிசை… தேனூரில் நெகிழ வைத்த மத நல்லிணக்க திருவிழா! | Photos

மத நல்லிணக்க திருவிழாமத நல்லிணக்க திருவிழாமத நல்லிணக்க திருவிழாமத நல்லிணக்க திருவிழாமத நல்லிணக்க திருவிழாமத நல்லிணக்க திருவிழாமத நல்லிணக்க திருவிழாமத நல்லிணக்க திருவிழாமத நல்லிணக்க திருவிழாமத நல்லிணக்... மேலும் பார்க்க

களைகட்டிய குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா; லட்சக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் | Photo Album

களைகட்டிய குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா.! லட்சக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம்.!குலசேகரபட்டினத்தில் கோலாகலமாக நடைப்பெற்ற தசரா திருவிழா மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரர் நவராத்திரி திருவிழா; 8-ம் நாள்... அன்னையின் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம்!

நவராத்திரி திருவிழா 8ம்நாள்நவராத்திரி திருவிழா 8ம்நாள்நவராத்திரி திருவிழா 8ம்நாள்நவராத்திரி திருவிழா 8ம்நாள்நவராத்திரி திருவிழா 8ம்நாள்நவராத்திரி திருவிழா 8ம்நாள்நவராத்திரி திருவிழா 8ம்நாள்நவராத்திரி ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா; 7-ம் நாள்... அன்னை மீனாட்சி முத்தங்கி சேவை!

அன்னை மீனாட்சி முத்தங்கி சேவைஅன்னை மீனாட்சி முத்தங்கி சேவைஅன்னை மீனாட்சி முத்தங்கி சேவைஅன்னை மீனாட்சி முத்தங்கி சேவைஅன்னை மீனாட்சி முத்தங்கி சேவைஅன்னை மீனாட்சி முத்தங்கி சேவைஅன்னை மீனாட்சி முத்தங்கி ச... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி திருக்கோயில் நவராத்திரி விழா: 6 ஆம் நாள் மீனாட்சி ஊஞ்சல் திருக்கோலம் | Photos

மீனாட்சி ஊஞ்சல் திருக்கோலம்மீனாட்சி ஊஞ்சல் திருக்கோலம்மீனாட்சி ஊஞ்சல் திருக்கோலம்மீனாட்சி ஊஞ்சல் திருக்கோலம்மீனாட்சி ஊஞ்சல் திருக்கோலம்மீனாட்சி ஊஞ்சல் திருக்கோலம்மீனாட்சி ஊஞ்சல் திருக்கோலம்மீனாட்சி ஊஞ... மேலும் பார்க்க