செய்திகள் :

ராமநாதபுரத்தில் சிக்கிய தங்ககட்டிகள்; தூத்துக்குடியில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி! - முழு பின்னணி

post image

ராமநாதபுரம் அருகேயுள்ள முடுக்குத்தரவை ரோட்டில் கடந்த செப்டம்பரில் போதைப்பொருள் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள குடிசை மாற்று வாரியம் அருகே நின்றிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி, பரமக்குடியைச் சேர்ந்த செல்வராஜ், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த சரவணன், பூபதி, வேலாயுதம் ஆகிய 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவலைக் கூறியதையடுத்து கேணிக்கரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

ஆத்தூரில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கநகைகள், ரொக்கப்பணம்

அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் 3.45 கிலோ எடை கொண்ட 38 தங்கக்கட்டிகள், 28 சவரன் தங்க நகை, ரூ.12.20 லட்சம் ரொக்கப்பணம் இருந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.5 கோடி வரை இருக்கும் எனத் தெரிகிறது. தொடர் விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம், முக்காணி தாமிரபரணி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வீசப்பட்ட வலையில் ஒரு கோணிச்சாக்கு மூட்டை  சிக்கியதாகவும் அதை திறந்து பார்த்தபோது அதில் தங்க கட்டிகள், தங்க நகைகள், ரொக்கப்பணம் இருந்ததாகவும் அதனை பங்கிடுவதற்காக ஆள்நடமாட்டம் இல்லாத குடிசை மாற்று வாரிய கட்டிடத்திற்கு வந்ததாகவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து கேணிக்கரை காவல் நிலைய போலீஸார், ”கேட்பாரற்றுக் கிடந்து பொருள் மீட்பு” என்று வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் 5 நாட்கள் மட்டும் விசாரணை செய்துவிட்டு விடுவித்துவிட்டனர். இந்த நிலையில், இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகள், தங்க நகைகளின் மதிப்பைக் குறைத்துக் காட்டி போலீஸார் எடுத்துக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆத்தூர்

இந்த வழக்கில் உண்மை நிலை கண்டறியவும், பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள், நகைகள் எங்கிருந்து வந்தது யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது? என்பது குறித்து விசாரணை நடத்திட வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர், பறிமுதல் செய்யப்பட்ட தங்கட்டிகளில் பெரும்பாலானவற்றை போலீஸார் பங்கிட்டுக் கொண்டதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்த  நிலையில், இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி  விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி அஜய் தங்கம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் ஆத்தூரில் கருப்பசாமி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர். இதில், மோதிரம், கை செயின், கம்மல் என 54 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.67 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், குலசை தசாரா திருவிழாவில் முடி, கிரீடம் உள்ளிட்ட வேடப் பொருட்கள் விற்பனை செய்ததில் கிடைத்த பணத்தில் நகைகள் வாங்கியதாக கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகம்

தங்கக்கட்டிகள் விவகாரத்தில் சிக்கிய 5 நபர்களின் உறவினர்கள் ஆத்தூர், குரும்பூர், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருவதாகவும் அவர்களிடம் மேலும் சில தங்கக்கட்டிகளை கொடுத்து பாதுகாக்கப்பட்டு வருவதாக பேச்சு எழுந்தது.

இதில் சிலர் வீடு, கார், தோட்டம் போன்றவற்றை குறுகிய காலத்திலேயே வாங்கியதாகவும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணையால் இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.   

சகோதரி கொலை வழக்கு: தீர்ப்பை கேட்டதும் நீதிமன்ற மாடியிலிருந்து குதித்து குற்றவாளி சகோதரன் தற்கொலை

மும்பை அருகில் உள்ள நவிமும்பை நெரூல் பகுதியை சேர்ந்தவர் நாகேஷ்(36). ஆட்டோ டிரைவரான நாகேஷ் தனது மனைவி ஜோத்சனாவிற்கு தனது சகோதரியின் கணவருடன் திருமணம் தாண்டிய உறவு இருப்பதாக சந்தேகப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: நள்ளிரவு வாக்குவாதத்தில் லிவ்இன் பார்ட்னரை கொலை செய்த சாப்ட்வேர் எஞ்சினியர்

புனேயில் ஏராளமான சாப்ட்வேர் கம்பெனிகள் இருக்கின்றன. அவர்களுக்காக அதிக அளவில் வாடகை வீடுகள், லாட்ஜ்கள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள ஹிங்ஜேவாடி என்ற இடத்தில் இருக்கும் பி.ஜி.ஹோம் ஒன்றில் தங்கிக்கொண்டு... மேலும் பார்க்க

குமரி: ரயில் பெட்டியில் பெண் படுகொலை; 7.30 மணிநேரம் அதே பெட்டியில் இருந்த கொலையாளி - அதிர்ச்சி தகவல்

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம... மேலும் பார்க்க

பேருந்தில் நகை திருட்டு : மீண்டும் கைது செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி!

தங்க நகை திருட்டு வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி, மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதுகிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரிலுள்ள சகோதரி வீட... மேலும் பார்க்க

குமரி: இரவு முழுவதும் சித்ரவதை; 72 வயது தந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற மகன்!

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே உள்ள அழகியபாண்டியபுரம் வாட்ஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ் (வயது 72). சுவாமிதாஸ் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் மயங... மேலும் பார்க்க

குளித்துக் கொண்டிருந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை; போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டுக்குப் பின்புறம் அமைக்கப்பட்ட மறைவிடத்தில் சிற... மேலும் பார்க்க