செய்திகள் :

ராமாயணம் : ``சீதை சாய் பல்லவியின் ஆக்‌ஷன் காட்சி; ஆதாரம் இதுதான்" - இயக்குநர் நிதேஷ் திவாரி விளக்கம்

post image

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'ராமாயணம்' திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இருப்பினும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் குறித்து ஒரு தரப்பினர் மத்தியில் அதிருப்தியும் சர்ச்சையும் எழுந்துள்ளது. குறிப்பாக, இப்படத்தில் சீதையாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவி சண்டைக் காட்சிகளில் நடித்திருப்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்த விமர்சனங்களுக்கு இயக்குநர் நிதேஷ் திவாரி தற்போது விளக்கமளித்துள்ளார்.

ராமாயணா: சாய் பல்லவி
ராமாயணா: சாய் பல்லவி

இது குறித்து 'தி ஃபெடரல்' (The Federal) ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ``சீதையை ஒரு போராளியாகச் சித்தரித்தது சமஸ்கிருதத்தின் 'அத்புத ராமாயணம்' மற்றும் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒடியா மொழியின் 'பிலங்கா ராமாயணம்' ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்தப் படைப்புகளில் சீதை வெறும் பொறுமையின் வடிவமாக மட்டுமல்லாமல், ஒரு துடிப்பான போராளியாகவும், பிரபஞ்ச சக்தியின் வடிவமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதிப்புகளில், ராமர் போர்க்களத்தில் நிலைகுலையும் போது, சீதை ஆக்ரோஷமான மகாகாளி அவதாரம் எடுத்து, ஆயிரம் தலைகளைக் கொண்ட 'சஹஸ்ர ராவணனை' வதம் செய்கிறார்.

போராளி சீதை என்பது ஏதோ நவீன பெண்ணியக் கருத்தாக்கத்தால் உருவாக்கப்பட்டதல்ல. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட இதிகாச மரபுகளிலேயே இத்தகைய சித்தரிப்புகள் ஏற்கனவே உள்ளன" என்றார். ஒருபுறம் இத்தகைய விவாதங்களும் சர்ச்சைகளும் நீடித்தாலும், திரைப்படம் வசூல் ரீதியாகப் பெரும் சாதனை படைத்து வருகிறது. இப்படம் வெளியான ஒன்பது நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 612.70 கோடி நிகர வசூலையும், உலகளவில் ரூ. 1,111 கோடி மொத்த வசூலையும் குவித்து வெற்றி நடை போடுகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

ராமாயணா: ``ஜடாயுவின் சிறிய வார்த்தைதான்; ஆனால் 200 டேக் வரை எடுத்தேன்"- அனுபம் கெர் பகிர்ந்த அனுபவம்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படமான ‘ராமாயணா - பாகம் 1’, வெளியான இரண்டாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபீஸில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. இப்படத்தில் ராவணனாக நடித்துள்ள யஷ்,... மேலும் பார்க்க

"பதற்றமடையும் சமயங்களில் என்னை அமைதிப்படுத்துவது அவர்தான்" - கணவர் விக்கி கெளஷல் பற்றி கத்ரீனா கைஃப்

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், தனது கணவர் விக்கி கௌஷல் தனக்கு அளிக்கும் ஆதரவு குறித்தும், தாய்மை மற்றும் நடிப்பு குறித்தும் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். Vicky Kaushal - Katrina Kaif2021-ம்... மேலும் பார்க்க

`என்பெயரில் இருப்பதால் எனக்குத்தான் சொந்தம்' - அமிதாப்பச்சன் இல்லத்துக்கு உரிமைகோரும் தம்பி மனைவி

மும்பை ஜுகு பகுதியில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ஜல்சா பங்களாவில் வசித்து வருகிறார். அந்த வீடு அமிதாப்பச்சன் மனைவி ஜெயாபச்சன் பெயரில் இருக்கிறது. ஆனால் இந்த வீட்டிற... மேலும் பார்க்க

ராமாயணா: ``மூவுலகிலும் இனி ஒரே ஒரு ஆட்சிதான் நடக்கும், அது..." - யஷ்க்கு குரல் கொடுத்த நடிகர் ஷரத்!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'ராமாயணா'. திரைப்படத்தில், ராவணனாக நடித்துள்ள நடிகர் யஷ்ஷிற்கு இந்திப் பதிப்பில் குரல் கொடுத்... மேலும் பார்க்க

Kiara Advani: " 'டாக்சிக்' படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் ஏமாற்றத்தை அளித்தன!" - கியாரா அத்வானி

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், நடிகர் யஷ் நடிப்பில் வெளியான 'டாக்ஸிக்' திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. அந்தப் படத்தில் கியாரா அத்வானி நடித்திருந்தார். இந்தப் படத்தில் கியாரா அத்வானிய... மேலும் பார்க்க

"டைகர் ஷெராப்பிற்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும்"- ஆயுஷ்மான் குரானாவிற்கு பிஷ்னோய் கேங்க் மிரட்டலா?

பாலிவுட் பிரபலங்களுக்குச் சமீப காலமாக லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. சமீபத்தில் மும்பையில் நடிகர் டைகர் ஷெராப் மீது இக்கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதி... மேலும் பார்க்க