பிரேக்அப் செய்த லிவ்-இன் காதலி; வீடியோ கால் செய்து வளர்ப்பு நாய்களை செங்கலால் அ...
ராமாயணா: ``ஜடாயுவின் சிறிய வார்த்தைதான்; ஆனால் 200 டேக் வரை எடுத்தேன்"- அனுபம் கெர் பகிர்ந்த அனுபவம்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படமான ‘ராமாயணா - பாகம் 1’, வெளியான இரண்டாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபீஸில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. இப்படத்தில் ராவணனாக நடித்துள்ள யஷ், சீதையாக நடித்துள்ள சாய் பல்லவியை கடத்திச் செல்லும்போது, அவரைக் காப்பாற்றப் போராடும் ஜடாயு கதாபாத்திரம் மிகுந்த உணர்ச்சிகரமாகவும் சண்டைக் காட்சிகள் நிறைந்ததாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. திரையில் இந்த ஜடாயு கதாபாத்திரத்திற்கு பழம்பெரும் நடிகர் அனுபம் கெர் தனது குரல் மூலம் உயிர் கொடுத்துள்ளார்.

இப்படத்திற்கு குரல் கொடுத்த அனுபவம் குறித்து ‘வெரைட்டி இந்தியா’ (Variety India) ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள அனுபம் கெர், ``படத்தின் 8 முதல் 10 நிமிடக் காட்சிகளை என்னிடம் காண்பித்தார்கள். அதைப் பார்த்து நான் பிரமித்துப் போனேன். அதன்பிறகு ஜடாயு தொடர்பான காட்சிகளைக் காண்பித்தார்கள். சீதையைக் காப்பாற்றும் முயற்சியில் வயதான ஜடாயு தோல்வியடைந்து, ராவணனுடனான மோதலில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடும் அந்தக் கடினமான உணர்வுகளைத் எனது குரலில் கொண்டு வர வேண்டி இருந்தது.
ஜடாயு மிகவும் தைரியமானவராக இருந்தாலும், வயது முதிர்வால் தளர்ந்து போகும் அந்த ஒட்டுமொத்தக் காட்சிக்கும் எனது ஆன்மாவையும் இதயத்தையும் அர்ப்பணிக்க வேண்டியிருந்தது. மேலும், ஒரு முக்கியமான காட்சியில் ஜடாயுவுக்கும் ராமருக்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமானதாக வெளிப்பட வேண்டும் என்று இயக்குநர் நிதேஷ் திவாரி அறிவுறுத்தினார். குறிப்பாக இறுதியில் வரும் ‘ஹே ராம்’ என்ற வசனத்தைச் சரியாகப் பேசுவதற்காகக் குறைந்தது 200 முறை முயற்சி செய்திருப்பேன். அது ஒரு சிறிய வரிதான், நாம் பலமுறை கேட்டதும் பேசியதும்தான். ஆனால், அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு குரலும் ஒலியும் மிகத் துல்லியமாக அமைய வேண்டியிருந்தது.
எனது இந்தக் கடின உழைப்பிற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ‘ராமாயணா’ படத்தின் சிறப்புத் திரையிடலில் கலந்துகொண்டபோது, படம் பார்த்த பார்வையாளர்கள் கண்களில் கண்ணீருடன் என்னிடம் வந்து படத்திற்காகவும், ஜடாயு கதாபாத்திரத்தைத் திரையில் கொண்டு வந்த விதத்திற்காகவும் நன்றி தெரிவித்தனர். இந்தியாவிலிருந்து இப்படி ஒரு திரைப்படம் உருவாகி உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுடன் உணர்வுப்பூர்வமாக இணைவதைப் பார்க்கும்போது பெருமையாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது." என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...















