செய்திகள் :

ரூ.15,000-க்கு கீழ் ரெகுலர் பேமென்ட் ஏதாவது இருக்கா? - இனி OTP கிடையாது - இது இப்போதே அமல்!

post image

திரும்ப திரும்ப குறிப்பிட்ட இடைவெளிகளில் செய்யும் பேமென்ட்டுகளை எளிதாக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி நடைமுறை ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.

யு.பி.ஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி, மேலே சொன்ன மாதிரி, தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் பேமென்ட் செய்து வந்திருப்போம்.

உதாரணத்திற்கு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு OTT தளத்திற்கு ரூ.300-ஐ சப்ஸ்கிரிப்ஷனாக கட்டி வருகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

இனி இந்தப் பேமென்ட்டுகளுக்கு OTP தேவைப்படாது.

இந்திய ரிசர்வ் வங்கி | RBI
இந்திய ரிசர்வ் வங்கி | RBI

ரூ.15,000-க்கு கீழ் அடிக்கடி கட்டி வரும் பேமென்ட்டுகளுக்கு OTP பதிவு செய்து கொண்டிருக்க வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஒருமுறை, ‘இனி OTP தேவையில்லை’ என்கிற ஆப்ஷனைக் க்ளிக் செய்துவிட்டால், அதற்கு மேல், அந்தப் பேமென்ட்டுகளுக்கு OTP கேட்கப்படாது.

இந்த நடைமுறை இப்போதே அமலுக்கு வந்துவிட்டது.

இன்சூரன்ஸ் பிரீமியம், எஸ்.ஐ.பி, கிரெடிட் கார்டு பில் போன்றவற்றுக்கு இந்த லிமிட் ரூ.1 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இது உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமல்ல… இந்தியாவைத் தாண்டி வேறு யாருக்கேனும் பணம் அனுப்ப வேண்டுமானாலும் இந்த நடைமுறை பொருந்தும்.

இது கிட்டத்தட்ட ‘ஆட்டோ டெபிட்’ போன்ற ஆப்ஷன் தான்.

ஆனால், ஆட்டோ டெபிட்டிற்கும், இந்த நடைமுறைக்கும் என்ன வித்தியாசம் என்றால்…

ஆட்டோ டெபிட்டில் சத்தமே இல்லாமல், நம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் சென்று கொண்டிருக்கும்.

ஆனால், இந்த புதிய நடைமுறையின் படி, பேமென்ட் செல்வதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு, இது குறித்த அலர்ட் மெசேஜ் உங்களுக்கு வந்து சேரும்.

அந்த நேரத்தைப் பயன்படுத்தி பேமென்ட்டை கேன்சல் செய்ய நினைத்தாலும் கேன்சல் செய்துவிடலாம்.

கேன்சல் செய்யும் நடைமுறை மிக மிக எளிது.

பணம்
பணம்

எத்தனை காலத்திற்கு இந்தப் பரிவர்த்தனை நடக்க வேண்டும் என்பதை செட் செய்துகொள்ளலாம்.

இந்த நடைமுறைக்காக வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் பெற முடியாது.

ஆட்டோ டெபிட் சில ஆப்களில்தான் இருந்து வந்தது. இப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த நடைமுறையின் படி, பெரும்பாலான நிதி பரிவர்த்தனைகளுக்கு வந்துவிட்து.

ஆட்டோ டெபிட்டை விட, இந்த புதிய நடைமுறை இந்திய ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் வருவதால் பாதுகாப்பானது.

மேலும் ரூ.15,000-க்கு மேல், நமக்கு தெரியாமல் பணப் பரிவர்த்தனை நடந்துவிடாது என்பதால், அது நம்முடைய பாதுகாப்பு பக்கத்திலேயே எப்போதும் இருக்கும்.

தொடரும் தொழிலதிபர்களின் வங்கி மோசடிகள், முடிவுக்கு வராத வழக்குகள்... இதற்கு இல்லையா ஒரு ‘END’?

கார்ப்பரேட்டுகளுக்கும், பல தொழிலதிபர்களுக்கும் கொடுத்த ரூ.9.75 லட்சம் கோடி கடனை வங்கிகள் சமீபத்தில் ‘ரைட் ஆஃப்’ செய்தது அதிர்ச்சியளித்தது. தற்போது, ‘அனில் அம்பானி வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த தொ... மேலும் பார்க்க

கிரெடிட் கார்டு கடனே அல்ல, 'கைமாத்து'; 'இந்த' லிமிட் நல்லது #CreditCard A-Z | பணம் வளர்ப்போம்

நாள் 3'கற்றது கை மண் அளவு... கல்லாதது உலகளவாச்சே?' - கிரெடிட் கார்டுகளைப் பற்றி தெரிந்துகொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. அவற்றை விளக்குகிறார் முன்னாள் வங்கியாளர் மற்றும் செபி ஸ்மார்ட் பயிற்சியாளர் மோகன... மேலும் பார்க்க

15 வருசமா கூட இருக்கும் நண்பன்; அவனைத் தெரிஞ்சுக்க வேண்டாமா?#CreditCard A-Z | 5 நாள்கள் 1 கான்செப்ட்

ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பதுதான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இந்த வாரம் திங்கட்கி... மேலும் பார்க்க

ஓராண்டிற்கு வங்கிக் கணக்கில் எவ்வளவு ரூபாயை பணமாகச் செலுத்தலாம்? - RBI சொல்வது என்ன?

டிஜிட்டல் இந்தியாவில் பெரும்பாலான இந்தியர்களுக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது. அந்த வங்கிக் கணக்கில் சிலர் லட்சக் கணக்கில் பணம் வைத்திருக்கிறார்கள்... சிலரோ சில நூறுகளை மட்டும் வைத்திருக்கிறார்கள். இதெல... மேலும் பார்க்க

ஏப்ரல் 1-ம் தேதி முதல் என்டரி கொடுக்கும் ATM புதிய நடைமுறைகள் - லிஸ்டில் உங்க வங்கி இருக்கா? செக்!

வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் வங்கி மற்றும் ஏ.டி.எம்களில் சில வங்கிகள் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த உள்ளன.அவை...> இனி HDFC வங்கி ஏ.டி.எம்களில் யு.பி.ஐ மூலம் இலவசமாக பணம் எடுப்பதற்கு லிமிட் நிர்ண... மேலும் பார்க்க