செய்திகள் :

ரூ.335 கோடிக்கு அயர்லாந்தில் 19-ம் நூற்றாண்டு கோட்டையை வாங்கிய மார்க் சக்கர்பெர்க்! - என்ன ஸ்பெஷல்?

post image

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க், அயர்லாந்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். தென்கிழக்கு அயர்லாந்தில் அமைந்துள்ள 'ஸ்ட்ரான்சலி கோட்டை' (Strancally Castle) என்ற இந்த சொத்தை, அவர் சுமார் €30 மில்லியன் (இந்திய மதிப்பில் தோராயமாக ₹335 கோடி) கொடுத்து வாங்கியிருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த கோட்டையுடன் சேர்த்து 440 ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டமும் இதில் அடங்கும்.

'ஐரிஷ் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, மார்க் சக்கர்பெர்க்கும் அவரது மனைவி பிரிசில்லா சானும் இந்த கோட்டையை சில வாரங்களுக்கு முன்பே, சந்தைக்கு வராமல் நேரடியாக நடந்த ஒரு ஒப்பந்தம் மூலம் வாங்கியுள்ளனர். இருப்பினும், இந்த விற்பனை குறித்த தகவல் இன்னும் அயர்லாந்தின் அதிகாரப்பூர்வ சொத்து விலை பதிவேட்டில் (Property Price Register) இடம்பெறவில்லை.

மனைவியுடன் மார்க் சக்கர்பெர்க்

இந்த கோட்டையின் சரியான விற்பனை விலை வெளியிடப்படவில்லை என்றாலும், இதன் மதிப்பு €20 மில்லியன் (₹223 கோடி) முதல் €30 மில்லியன் (₹335 கோடி) வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கோட்டை, டப்ளினில் உள்ள மெட்டாவின் சர்வதேச தலைமையகத்திலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதுகுறித்து சக்கர்பெர்க்கின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லத்தைப் பராமரிப்பதில் மார்க்கும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்கள். மெட்டாவின் சர்வதேச தலைமையகம் அமைந்துள்ள அயர்லாந்தில் நேரத்தைச் செலவிட அவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

சக்கர்பெர்க்கின் புதிய கோட்டை பற்றிய தகவல்கள்

ஸ்ட்ரான்சலி கோட்டை, 19ஆம் நூற்றாண்டில் கோதிக் பாணியில் கட்டப்பட்ட ஒரு பிரம்மாண்ட மாளிகையாகும். இது பிளாக்வாட்டர் பள்ளத்தாக்கில், பிளாக்வாட்டர் நதிக்கரையில் அமைந்துள்ளது. முன்னாள் டோரி கட்சி எம்.பி.யான ஜான் கெய்லிக்காக, சுமார் 1830-ஆம் ஆண்டில் இது கட்டப்பட்டது.

பிரையன் டி ப்ரெஃப்னி மற்றும் ரோஸ்மேரி ஃபோலியட் எழுதிய 'தி ஹவுசஸ் ஆஃப் அயர்லாந்து' என்ற புத்தகத்தின்படி, இந்த கோட்டை 16,000 சதுர அடி பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அளவைப் பற்றி குறிப்பிடும்போது, "சமையலறையிலிருந்து சாப்பாட்டு அறைக்குச் செல்ல நான்கரை நிமிடங்கள் விறுவிறுப்பாக நடக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கோட்டையை, தனியார் முதலீட்டு நிறுவனமான RAB கேப்பிட்டலின் இணை நிறுவனர் மைக்கேல் ஆலன்-பக்லி மற்றும் அவரது மனைவி ஜியான்கார்லா ஆகியோர் சக்கர்பெர்க்கிற்கு விற்றுள்ளனர் எகிறார்கள். அவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக இந்த தோட்டத்தில் வசித்து வந்தனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "25 ஆண்டுகள் வாழ்ந்த எங்கள் வீட்டை நல்ல நினைவுகளுடன் விட்டுச் செல்கிறோம். ஸ்ட்ரான்சலி கோட்டையைப் பாதுகாத்து புனரமைக்க எங்களுக்கு கிடைத்த வாய்ப்புக்கு நன்றி கூறுகிறோம். மார்க்கும் அவரது குடும்பத்தினரும் இந்த சொத்தை தொடர்ந்து பராமரித்து, தங்கள் இல்லமாக மேம்படுத்துவார்கள் என்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி" என்று கூறியுள்ளனர்.

மார்க் சக்கர்பெர்க்கும் பிரிசில்லா சானும் அமெரிக்காவிலேயே தொடர்ந்து வசிப்பார்கள் என்றும், அயர்லாந்துக்கு வரும்போது இந்த கோட்டையைத் தங்குமிடமாகப் பயன்படுத்துவார்கள் என்றும் நம்பப்படுகிறது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களுக்குச் சொந்தமான மெட்டா, 2009 முதல் அயர்லாந்தில் தனது ஐரோப்பிய தலைமையகத்தைக் கொண்டுள்ளது. அங்கு சுமார் 1,500 பேர் பணிபுரிகின்றனர்.

அயர்லாந்தில் ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்ற சக்கர்பெர்க்கின் ஆர்வம் கடந்த கோடையில் வெளிப்பட்டது. லிபர்ட்டி மீடியா தலைவர் ஜான் மலோன், தனது காஸ்டில்மார்டின் ஹவுஸ் மற்றும் எஸ்டேட்டை வாங்குவதற்கு சக்கர்பெர்க் முன்வந்ததாகக் கூறியிருந்தார்.

பெரிய ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்வது சக்கர்பெர்க்குக்கு புதிதல்ல. பாலோ ஆல்டோவில் 11-க்கும் மேற்பட்ட சொத்துக்களையும், புளோரிடா, வாஷிங்டன் டி.சி. மற்றும் ஹவாய் ஆகிய இடங்களிலும் அவருக்கு வீடுகள் உள்ளன.

தொழில்நுட்ப உலகில் பெரும் கோடீஸ்வரர்கள் பெரிய வீடுகளை வாங்குவது இது முதல் முறையல்ல. சமீபத்தில், xAI இணை நிறுவனர் டோனி யுஹுவாய் வூ, சிலிக்கான் வேலிக்கு அருகே ₹670 கோடி மதிப்புள்ள மாளிகை ஒன்றை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் மக்கள் தொகை, விரிவடையும் நகரம்: கடல் நீரை குடிநீராக ஏற்க தயாராகும் மும்பை மக்கள்

மும்பையில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு மும்பை நகரமும் விரிவடைந்து வருகிறது. ஏற்கனவே மும்பைக்கு அடுத்து நவிமும்பை என்ற இரண்டாவது மும்பை உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது மு... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாட்டு வந்துள்ள ரஷ்ய அதிபர் புடின் - திருக்குறளை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசி வ... மேலும் பார்க்க

`இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம்' - அமெரிக்க ஆய்வு அறிக்கை சொல்வதென்ன?

இந்தியாவிடம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிடம் 190 அணுகுண்டுகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானை விட சுமார் 20 அதிகம் என்று அமெரிக்கா... மேலும் பார்க்க

"மும்பை முழுக்க குப்பைமயம்" - நாட்டின் பணக்கார மாநகராட்சியைச் சாடிய உயர்நீதிமன்றம்

மும்பை காஞ்சூர்மார்க் குப்பைக் கிடங்கில் இருந்து வரும் மாசு கலந்த காற்றால் பாதிக்கப்பட்டுள்ள கன்னம்வார் நகர் மக்கள் இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

`மெஹந்தி போடவும் வந்தாச்சு மெஷின்... Some more jobs gone' - தொழிலதிபர் பகிர்ந்த வீடியோ வைரல்!

திருமணம், விழா என்றாலே நினைவுக்கு வருவது மெஹந்தி. ஒரு கையில் அழகான டிசைனை உருவாக்க மெஹந்தி கலைஞரின் பொறுமையும் கைத்திறனும் அவசியம். ஆனால், இனி இதையும் மெஷின் செய்யுமா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது... மேலும் பார்க்க