ராஜ ராஜ சோழன் சதய விழா: ஆப்சென்ட்டான அமைச்சர்... தவெக ஆட்சியிலும் தொடர்கிறதா சென...
'வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி' - தமிழகத்தில் 26-ம் தேதி வரை மிகக் கனமழை!
2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாதி வரை கொளுத்திய வெயில், இப்போதுதான் லீவு எடுத்திருக்கிறது.
கடந்த வாரத்திலிருந்து தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.
நேற்று (அக்டோபர் 21) இந்திய வானிலை மையம் கொடுத்துள்ள தகவலின்படி,“தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக,
அக்டோபர் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
எந்த மாநிலங்களில் எப்போது மழை?
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 26-ம் தேதியும்,
கேரளாவில் அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும்,
லட்சத்தீவுப் பகுதிகளில் அக்டோபர் 21, 22 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும்,
தெற்கு உள் கர்நாடகப் பகுதிகளில் அக்டோபர் 22 முதல் 25-ம் தேதி வரையிலும்ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.”
நேற்றைய சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட்டின்படி, தமிழ்நாட்டில் இன்று முதல் எந்தெந்த மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?





















