செய்திகள் :

"வாக்களித்த பெண்களுக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு அவர்களுக்குத் தரும் பரிசா?"- கனிமொழி காட்டம்

post image

சாத்தான்குளத்தில் வீடு புகுந்து தாயை வெட்டிக் கொன்று இரண்டு பெண் குழந்தைகளை கடத்திய சம்பவம், தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த முதலூரில் உள்ள ஒரு வீட்டுக்குள் நள்ளிரவில் ஆயுதங்களுடன் புகுந்த இளைஞர் ஒருவர், அங்கு உறங்கிக் கொண்டிருந்தவர்களைச் சரமாரியாக வெட்டியதில் மேரி விஜீலா என்ற பெண் உயிரிழந்திருக்கிறார்.

க்ரைம்
க்ரைம்

அவரது கணவர் முத்துகிருஷ்ணன், மகன் பிளசெட் ராஜா ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு மகள்கள் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், சில மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

வீடு புகுந்து நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சம்பவத்திற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து மேரி விஜீலா என்கிற பெண் வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்டு, அவரின் இரண்டு பெண் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர். அவரின் கணவரும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வீட்டிலும் பாதுகாப்பில்லை, பொது வெளியிலும் பாதுகாப்பில்லை எனும் அளவிற்கு ஓர் அசாதாரணச் சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது பொறுப்பற்ற தவெக அரசு.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அன்றாடச் செய்தியாகிக் கொண்டிருக்கும் போது, அவற்றைத் தடுக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறது ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப்படை?

தங்களுக்கு வாக்களித்த பெண்களின் பாதுகாப்புக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு அவர்களுக்குத் தரும் பரிசா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

ஒன்றிய - மாநில உறவு குறித்து திமுக அரசு அமைத்த கமிட்டி; கிடப்பில் போடும் தவெக அரசு? - பின்னணி என்ன?

ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு குறித்த சிக்கல்களை ஆராய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட கமிட்டியை தவெக அரசு கிடப்பில் போடுவதாகவும், கமிட்டிய... மேலும் பார்க்க

`விஜய்க்கு தனுஷ் போட்டியே கிடையாது; ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா என்பதை..!' - மரியவில்சன் சொல்வதென்ன?

நிதியமைச்சர் மரியவில்சன் இன்று (அக்.23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "தனுஷ் அரசி... மேலும் பார்க்க

`செங்கோட்டையன் அழுத்தத்தால்தான் இந்தக் கைது நடவடிக்கை நடந்துச்சு..!' - நாதக கார்த்திகா பேட்டி

தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் பரப்புரை மேற்கொண்டது உள்ளிட்ட சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டி... மேலும் பார்க்க

தலைமுறை தாண்டிய தமிழ்ப் பொக்கிஷங்கள்: புதுக்கோட்டை ஓலைச்சுவடிகளுக்கு புத்துயிரூட்டிய தொல்லியல் துறை!

காலம் எத்தனையோ வேகமான மாற்றங்களைச் சந்தித்தாலும், நமது முன்னோர்களின் பண்பாட்டுப் பெருமைகளையும் ஞானத்தையும் தன்னுள் தாங்கி நிற்கும் ஏடுகள் அழியாமல் காக்கப்படும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி.புதுக்கோட்ட... மேலும் பார்க்க

Israel Election : உலகின் மிக விசித்திரமான தேர்தல் முறை — அக்டோபர் 27ல் என்ன நடக்கும்? | Explained

இஸ்ரேலில் இதுவரை ஒரு கட்சி கூட தனியாக ஆட்சி அமைத்ததில்லை. காரணம் அதன் தேர்தல் முறை. உலகிலேயே மிகவும் விசித்திரமான, மிகவும் சிக்கலான தேர்தல் முறையைக் கொண்ட நாடுகளில் ஒன்று இஸ்ரேல். இஸ்ரேலின் நாடாளுமன்ற... மேலும் பார்க்க

"சிஜேபி போன்ற கட்சிகளுக்கு ஆதரவு நோ; எந்தக் கட்சியாக இருந்தாலும் போராட உரிமை உண்டு" - அண்ணாமலை

`வீ தி லீடர்ஸ்' அமைப்பு மூலம் பெண்கள் வளர்ச்சி மாநாடு கிருஷ்ணகிரியில் நடந்தது. கிருஷ்ணகிரி - தருமபுரி மாவட்டஙகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்ட இம்மாநட்டில் கலந்துகொண்டு அவ்வமைப்பின் தலைவர் அண்ணா... மேலும் பார்க்க