செய்திகள் :

வால்பாறை: கொண்டை ஊசி வளைவில் சரிந்து விழுந்த ராட்சத பாறைகள்... சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை!

post image

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது திடீரென இரண்டு ராட்சத பாறைகள் சரிந்து சாலையில் விழுந்ததால், சாலையில் பிளவு ஏற்பட்டு சேதமடைந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 

வால்பாறை சாலை சீரமைப்பு
வால்பாறை சாலை சீரமைப்பு

இதனால் நேற்றிரவு முதல் பொள்ளாச்சியில் இருந்து வந்த வாகனங்கள் ஆழியார் வனச் சோதனைச் சாவடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த வாகனங்கள் அட்டகட்டி பகுதியில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் திட்டமிட்டபடி தங்களது பயணங்களை மேற்கொள்ள முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். வனத்தை ஒட்டிய சாலையில் நடுவழியில் சிக்கிய சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் தவித்தனர். மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் பாறைகளை அகற்றி, சாலையை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர். இப்பணிகளை பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ண சாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சாலை சீரமைக்கும் பணி நிறைவு பெற்றது. மேலும் சாலைப் பிளவு ஏற்பட்டுள்ள காரணத்தால் இந்த பகுதியில் பாதுகாப்பிற்காக மணல் மூட்டைகள் மற்றும் அறிவிப்பு தடுப்பு பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து வால்பாறை, அட்டகட்டி, காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு ஊழியர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும், அரசு பேருந்துகளுக்கும் மட்டும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வால்பாறை பகுதிக்குச் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடியில் வாகனங்களை நிறுத்தி வனத்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

வால்பாறை சாலை சீரமைப்பு
வால்பாறை சாலை சீரமைப்பு

'ஞானேஷ் குமாருக்கு எதிரான மாணவர் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த தமிழக போலீஸ்!' - என்ன காரணம்?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் SIR க்கு எதிராகவும் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி, இடதுசாரி மாணவ அமைப்புகள் மூலம் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்... மேலும் பார்க்க

``10 நாள்களாக கண்டுபிடிக்க முடியாத சிறுமி; காவல்துறை செயலிழந்து வருகிறதா?" - டிடிவி தினகரன் காட்டம்

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி நடுப்பட்டு சாலையைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது 7 வயது மகள், அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-ம் தேதி சிறுமியின் பிறந்தநாள் கொண்ட... மேலும் பார்க்க

வேலூர்: பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து; உடல் கருகி பெண் பலி; இன்னொருவர் மிகக் கவலைக்கிடம்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அப்புக்கல் சாலையில் தனியார் திருமண மண்டபத்துக்கு பின்புறமாக `ஸ்ரீ சப்தகிரி’ என்ற பெயரில் பட்டாசு உற்பத்தி குடோன் அமைந்திருக்கிறது. இன்று காலை 10:30 மணியளவில் 2 ஆண்கள், 6 பெ... மேலும் பார்க்க

நாதக கார்த்திகா கைது: "நயினாருக்கு எதிராகக் கைது நடவடிக்கை எடுத்தார்களா?" - கனிமொழி கேள்வி

திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது நாதக வேட்பாளர் கார்த்திகா கைது குறித்து பேசிய கனிமொழி, "வேண்டுமென்றே கால்புணர்ச்சியில் செய்திருக்கக்கூடிய அத்துமீறல்தான் இந்தக... மேலும் பார்க்க

'150 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் சரியானது, ஆனால் நிதி.!' - அன்புமணி சொல்வதென்ன?

125 நாள் வேலைத் திட்டத்தில் கூடுதலாக 25 நாள் வேலை வழங்க ரூ.9,192 கோடி தேவை என்றும், அரசு ஒதுக்கிய ரூ.100 கோடியால் பயனில்லை என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர... மேலும் பார்க்க

France Protests: தெருக்களில் தீப்பிழம்புகள் – திண்டாடும் 9 நாடுகள்... அலறும் ஐரோப்பா கண்டம்!

​அமைதியின் சொர்க்கமாகவும், சட்டம்-ஒழுங்கு மற்றும் மனித உரிமைகளின் உலகளாவிய கேந்திரமாகவும் வர்ணிக்கப்பட்டு வந்த ஐரோப்பியக் கண்டம், தற்போது இதுவரை காணாத உக்கிரமான வன்முறைகளாலும் கொந்தளிப்புகளாலும் போர்... மேலும் பார்க்க