செய்திகள் :

வாழ்நாள் முழுவதும் யாசகம் செய்த மூதாட்டி; மறைவுக்குப் பின் வீட்டில் கிடைத்த ரூ.8.40 லட்சம்! | Viral

post image

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில், யாசகம் செய்து வாழ்ந்து வந்த 68 வயது பெண் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.8.40 லட்சம் பணம் மீட்ட்கப்பட்டிருக்கிறது.

மாண்டியாவைச் சேர்ந்த ஹூர் என்ற 68 வயது பெண், வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நேற்று (23) உயிரிழந்தார்.

அவரது வீட்டில் இருந்த பொருள்களை அப்பகுதி மக்கள் சோதனை செய்தபோது, ஏராளமான நாணயங்கள் மற்றும் ரூ.10, ரூ.20, ரூ.50 உள்ளிட்ட ரூபாய் நோட்டுகள் மூட்டைகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பணம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், அவற்றை வெளியே எடுத்து எண்ணத் தொடங்கினர். இந்தப் பணத்தை எண்ணும் காட்சிகள் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஹூர் தனது சகோதரியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது சகோதரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.

பின்னர் பணம் முழுவதும் எண்ணப்பட்டதில், மொத்தம் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. அந்தப் பணம் ஹூரின் சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதில், ஒரு சகோதரர் ரூ.6 லட்சத்தைப் பெற்றுக்கொண்டார். மற்றொரு சகோதரருக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்பட்டது. அவர் அந்தத் தொகையை பள்ளிவாசலுக்கு நன்கொடையாக வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்நாள் முழுவதும் யாசகம் செய்து சேமித்த பணம், ஹூரின் மறைவுக்குப் பிறகே வெளிச்சத்துக்கு வந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

`இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம்' - அமெரிக்க ஆய்வு அறிக்கை சொல்வதென்ன?

இந்தியாவிடம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிடம் 190 அணுகுண்டுகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானை விட சுமார் 20 அதிகம் என்று அமெரிக்கா... மேலும் பார்க்க

"மும்பை முழுக்க குப்பைமயம்" - நாட்டின் பணக்கார மாநகராட்சியைச் சாடிய உயர்நீதிமன்றம்

மும்பை காஞ்சூர்மார்க் குப்பைக் கிடங்கில் இருந்து வரும் மாசு கலந்த காற்றால் பாதிக்கப்பட்டுள்ள கன்னம்வார் நகர் மக்கள் இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

`மெஹந்தி போடவும் வந்தாச்சு மெஷின்... Some more jobs gone' - தொழிலதிபர் பகிர்ந்த வீடியோ வைரல்!

திருமணம், விழா என்றாலே நினைவுக்கு வருவது மெஹந்தி. ஒரு கையில் அழகான டிசைனை உருவாக்க மெஹந்தி கலைஞரின் பொறுமையும் கைத்திறனும் அவசியம். ஆனால், இனி இதையும் மெஷின் செய்யுமா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது... மேலும் பார்க்க

வந்தே மாதரம்: முடியும் வரை எழுந்து நின்ற ஒமர் அப்துல்லா; அதிருப்தி தெரிவித்த காங்கிரஸ் - சாடும் பாஜக

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் முதல்வர் ஓமர் அப்துல்லா, அவரது தந்தையும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இதி... மேலும் பார்க்க

மும்பை: "வாசனை திரவியம் வாங்கத்தான் வந்தேன்" - பிரதமர் நிகழ்ச்சி துப்பாக்கியுடன் இருவர் கைது

மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் அம்பானி வணிக வளாகத்தில் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி நடக்கும் முன்பாக நிகழ்ச்சி நடக்க வேண... மேலும் பார்க்க