செய்திகள் :

'விஜய் அண்ணா, நீங்கதான் என் பிள்ளையைக் காப்பாத்தனும்.!' - தாயின் கண்ணீர் போராட்டம்

post image

புதுக்கோட்டையில் இன்று புதிய பேருந்து நிலையம் மற்றும் உள் விளையாட்டரங்கத்தைத் திறந்து வைப்பதற்காகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும் வருகை தந்த தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யைச் சந்தித்துத் தனது 9 வயது மகனின் உயிரைக் காப்பாற்ற மருத்துவ உதவி கோரி, பெண் ஒருவர் அதிகாலை 2:30 மணி முதலே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருந்து கடும் நெருக்கடிக்குள் மத்தியில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் மனு அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா (29). இவர் தனது நோய்வாய்ப்பட்ட 9 வயது மகனுடன் முதலமைச்சரின் உதவிக்காக மனு அளிப்பதற்காக அதிகாலை 2 மணி முதல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தார்.

அவரிடம் விசாரித்தபோது,

"நாங்க திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சேர்வைக்காரன்பட்டி ஊரு. என் மகன் மதன்ராஜூக்கு மூளையில பிரச்சனை , கேன்சர் கட்டி இருந்து ஆபரேஷன் பண்ணிருக்கோம். என் வீட்டுக்காரர் முருகராஜ் சுவீட் கடையில வேலை பாக்குறாங்க..நான் எந்த வேலைவாய்ப்பு எதுவும் இல்ல, வீட்லதான் இருக்கேன்.

என்னோட வயசு 29 இந்த பையன் எனக்கு மூணாவது பிள்ளை. பர்ஸ்ட் ஒரு பையன் இறந்து போயிட்டான், அப்புறம் பாப்பா, அப்புறம் இந்த தம்பி. என் மகனுக்கு மூளையில கேன்சர் கட்டி இருக்கு. அதை ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டாங்க. அதுக்கு எல்லாத்தையும் வித்து 12 லட்ச ரூபாய் செலவு பண்ணோம், இப்ப திருப்பியும் கேன்சர் கட்டி வளருது, ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க.

திருச்சி தனியார் ஹாஸ்பிட்டல்லதான் முதலில் பாத்தோம். திருப்பியும் 5 லட்ச ரூபாய் ஆகும்ங்கிறாங்க, அடுத்த வாரம் 14-ஆம் தேதிக்குள்ள ஆபரேஷன் பண்ணனும்ங்கிறாங்க. முதல்ல 12 லட்ச ரூவாய்க்கு செலவு பண்ணிட்டோம். மறுபடியும் ஆபரேஷன் பண்ணாதான் பையனைக் காப்பாத்த முடியும்ங்கிறாங்க, எங்களால இதுக்கு மேலே செலவு பண்ண வழியில்லை. அதனாலதான் விஜய் அண்ணனைப் பார்க்க வந்துருக்கோம், வேற யாரும் எங்களுக்கு எடுத்து உதவ ஆளில்ல. அப்பாக்கு கேன்சர் வந்து இறந்து போயிட்டாங்க. அப்பா இப்பதான் இறந்தாங்க, ஒரு மூணு மாசம் தான் ஆகுது. என் கூடப் பிறந்த தம்பி சின்ன பையன், எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. அதுக்குத்தான் விஜய் அண்ணன்கிட்ட உதவி கேட்டு வந்திருக்கேன்,

நான் நைட் ரெண்டரை மணிக்கு வந்துட்டேன். கலெக்டர் ஆபீஸ்க்கு முன்னாடி காத்துக் கிடந்தோம். அதிகாரிகள்கிட்டே கெஞ்சி கதறி இப்போத்தான் விஜய் அண்ணாக்கிட்டே மனு கொடுத்தோம்.. விஜய் அண்ணா நீங்கதான் என் பிள்ளையைக் காப்பாற்றனும்!" என்று அவர் அழுது கதறிய காட்சி அங்கு இருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

பஞ்சாப்: வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி; ஆம் ஆத்மியிலிருந்து விலகியவுடன் பாஜகவில் இணைந்த 3 MLAக்கள்!

பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. தற்போது அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இத்தேர்தலுக்காக 40 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்... மேலும் பார்க்க

`வாரத்துக்கு ஒருநாள் வேட்டி சட்டை' - தவெக அரசின் முடிவை விமர்சிக்கும் சிபிஎம்! - என்ன காரணம்?

சென்னை எழும்​பூரில் உள்ள அரசு அருங்காட்​சி​யகத்​தில் தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்தித் துறை சார்​பில் தமிழ்​நாடு நாள் விழா நேற்று நடைபெற்​றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜ்மோகன்,... மேலும் பார்க்க

தீபாவளியை ஜொலிக்கவைக்கும் GRT ஜுவல்லர்ஸ் - தங்கத்துக்கு வெள்ளி இலவசம் மற்றும் பல சலுகைகள்!

ஐஸ்வர்யம், சந்தோஷம் மற்றும் ஒளியின் அடையாளமாகத் திகழும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, GRT ஜுவல்லர்ஸ் வழங்குகிறது "தங்க தீபாவளி". கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி, குடும்பத்தினருடன் இணைந்திருக்கும் அ... மேலும் பார்க்க

``சட்டம் ஒழுங்கு பிரச்னையைப் போராட்டம் மூலம் ஊதிப் பெரிதாகக் காட்டுகிறார்கள்" - அமைச்சர் வன்னி அரசு

அரசுக் கல்லூரி மாணவர்கள், ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் மாநில உரிமைப் பாதுகாப்பு ஆகிய அனைத்துத் தளங்களிலும் இந்த அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்... மேலும் பார்க்க

’அம்பாசமுத்திரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியா?’ - மு.வீரபாண்டியன் சொல்வது என்ன?

கோவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசு கூடுதல் போக்சோ நீதிமன்றங்களை ஏற்படுத்தியது வரவேற்கத்தக்கது. பெண்க... மேலும் பார்க்க

"குடிநீர், கழிவறைகூட இல்லை!" - முதல்வர் விஜய்யைச் சந்திக்க வந்த கே.எம்.செரீப் பூட்டி வைப்பு

புதுக்கோட்டை தவெக கூட்டணிக் கட்சி வேட்பாளர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் முதல்வரைச் சந்திக்கத் தடை. கலெக்டர் அலுவலக அறைக்குள் வைத்து பூட்டிய அதிகாரிகள்.புதுக்கோட்டையில் இன்று பல்வேறு அரசு நலத்திட்டத்... மேலும் பார்க்க