செய்திகள் :

விழுப்புரம்: `கழுத்தை நெரித்து போட்டுட்டேன்' - தந்தையால் பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த சோகம்

post image

விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்திருக்கும் வி.பரங்கனி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான சிவசாத்திரிக்கு, இரண்டு மகள்கள். இளைய மகள் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் இருக்கும் தன்னுடைய பாட்டி வீட்டில் தங்கி பத்தாம் வகுப்புப் படித்து வந்திருக்கிறார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் அவரது பெற்றோருக்குத் தெரியவர, சிறுமியைக் கண்டித்திருக்கின்றனர்.

அத்துடன் அவரை வி.பரங்கனி கிராமத்துக்கே அழைத்து வந்த பெற்றோர், அந்தப் பகுதியிலுள்ள பள்ளியில் சேர்த்திருக்கின்றனர். அதன்பிறகும் அந்த இளைஞருடன் செல்போனில் பேசி வந்திருக்கிறார் சிறுமி. அதை பெற்றோர் மீண்டும் கண்டித்திருக்கின்றனர். ஆனால் காதலைக் கைவிட மறுத்த சிறுமி, காதலனுடன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்.

சிறுமியைக் கொலை செய்த தந்தை
கைது

இந்த நிலையில்தான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிறுமியின் தாய் நேற்று இரவு வேலூருக்குச் சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை மகள் என்றும் பாராமல் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார் சிவசாத்திரி.

தொடர்ந்து தன்னுடைய சகோதரருக்கு போன் செய்த அவர், `சின்னவளைக் கழுத்தை நெரிச்சிப் போட்டுட்டேன்' என்று தெரிவித்திருக்கிறார். அதைக் கேட்டுப் பதறிப் போன அவர்கள் வீட்டுக்கு வந்திருக்கின்றனர்.

அப்போது சிவசாத்திரி அமைதியாக அமர்ந்திருந்த நிலையில், மயக்க நிலையில் இருந்த சிறுமியை அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதையடுத்து சிவசாத்திரியைக் கைது செய்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கையில் மீண்டும் கொலை: மானாமதுரையில் பட்டப்பகலில் காதுகளை அறுத்து 8 பவுன் நகை கொள்ளை!

சுள்ளான் மதன் விவகாரம் மற்றும் ரவுடி கும்பலின் அடுத்தடுத்த தொடர் கொலைகளால் சிவகங்கை மாவட்டமே நிலைகுலைந்து போயுள்ளது. இதன் பரபரப்பும் அச்சமும் பொதுமக்கள் மனதிலிருந்து இன்னும் அகலாத நிலையில், சிவகங்கையி... மேலும் பார்க்க

விழுப்புரம்: மது போதையில் மனைவியுடன் தகராறு - ஆறு வயது மகனை கிணற்றில் வீசி கொலைசெய்த தந்தை கைது!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்திருக்கும் நல்லான் பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் - தேவி தம்பதி. இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். கடைசிக் குழ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்கு லிஃப்ட் கொடுத்து பாலியல் தொல்லை அளித்த வழக்கு; த.வெ.க நிர்வாகி சிறையிலடைப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரிமாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்எம்.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருடன் பக்கத்து ஊரான மூலச்சல்பகுதியைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரசு வேலை என்று போலி நியமன ஆணை; 4 பேரிடம் ரூ.16 லட்சம் மோசடி - மருத்துவர் உட்பட இருவர் மீது வழக்கு!

நாமக்கல் மாவட்டம், முத்துகாட்டுப்பட்டியில் 28 வயது பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், அவர் தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் தனக... மேலும் பார்க்க

வெள்ளை உடும்பு, 16 மலைப்பாம்பு; பாங்காக் டு திருச்சி; ஏர்போர்ட்டில் சிக்கிய 45 அறிய வகை உயிரினங்கள்!

வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரிய வகை வனவிலங்குகள் மற்றும் ஊர்வன உயிரினங்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்க... மேலும் பார்க்க

பெரம்பலூர்: வயதான பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு; 15 கி.மீ தூரம் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள்!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள புது வேட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. வயதான இவர், ஆடு, மாடுகளை வளர்த்து அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். இந்நிலையில், புது ... மேலும் பார்க்க