செய்திகள் :

`விஷமிகளுக்கு ஏமாற்றமே; ரஜினியின் அஸ்திவாரத்தை கலைப்பது எளிதல்ல’ - சோளிங்கர் ரவி பதிலடி

post image

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான `ஜெயிலர் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்து `ஹிட்’ அடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் வன்மத்துடன் கமெண்ட்ஸுகளை பதிவிட்டுவந்த நபர்களுக்கு பதிலடி தரும்விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளரான சோளிங்கர் என்.ரவி.

ரஜினியுடன் சோளிங்கர் என்.ரவி

`ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், ``பழக, பழக பாலும் புளிக்கும். பார்க்க பார்க்க அனைத்தும் சலிக்கும்... ஆனால், 51 வருடங்களாக பார்த்த முகமும், நடிப்பும் இன்றும் நமக்கு சலிக்காமல், வெறுக்காமல் ஒருவரின் காந்த சக்தியால் நம்மை ஈர்த்து கொண்டிருப்பது எவ்வாறு சாத்தியம்? அந்த விடைத் தெரியாத வசீகரம்தான், தலைவர் ரஜினிகாந்த். அவருக்கு மட்டுமே கிடைத்த வரம்; அதனால்தான் அவர் அதியப்பிறவி.

ஒரு நடிகரால் குறைந்தபட்சம் ஒரு தலைமுறையினரை தனது நடிப்பால் கவர செய்வதே... இங்கு கடினமாக இருக்கும் சமயத்தில், 5 தலைமுறையினரை தனது நடிப்பால் இவர் கவர்ந்து கொண்டிருப்பது எப்படி? இது தலைவர் ரஜினிகாந்த்தால் மட்டுமே சாத்தியமான மாயாஜாலம்.

வருடந்தோறும் வதந்திகளை பரப்பி, எண்டு கார்டு போட நினைக்கும் விஷமிகள் தலைவர் ரஜினிகாந்த்தின் எனர்ஜிமிக்க வெற்றியைப் பார்த்து ஏமாற்றமே அடைந்திருக்கிறார்கள். தலைவர் மீது பல அவதூறுகளை சுமத்தியும் 51 வருடங்களாக அவரை வீழ்த்த முடியாமல் போனது எப்படி? எந்த காலத்திலும் அவர் மீது பிறர் போடும் பழிகளாலும், சில படத்தின் தோல்விகளாலும் அவரின் வீழ்ச்சியை நிர்ணயித்துவிட முடியாது.

சோளிங்கர் என்.ரவி வெளியிட்ட அறிக்கை

ஏனென்றால், தலைவர் ரஜினிகாந்த் என்ற மனிதர் வெற்றிபெறும் முன்பு தனது அஸ்திவாரத்தை தன்னந்தனியான முயற்சியுடனும், கடின உழைப்பு, தனித்துவம், ஸ்டைல், துணிவு போன்றவைகளால் உருவாக்கி, வெற்றி பின்னரும் ஆணவமற்ற, எளிமை, பணிவு போன்றவைகளால் தனது அடையாளத்தை பலப்படுத்திக்கொண்டே இருக்கிறார். தலைவரின் அஸ்திவாரத்தை கலைப்பது அவ்வளவு எளிதல்ல.

எவரையும் வஞ்சிக்காமல் தனக்கான குறிக்கோளை நோக்கி தன் வழியில் அவர் இன்றும் பயணித்துக் கொண்டிருக்கிறார். சறுக்கல்களைச் சந்தித்தாலும் தனக்கான சவால்களை சளைக்காமல் எதிர்கொண்டு, சரிந்துவிடாமல் சாதனை படைத்து வரும் சரித்திரம்தான் தலைவர் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்" என்று குறிப்பிட்டிருக்கிறார் சோளிங்கர் என்.ரவி.

"பெண்களே, சிறுமிகளே... உதவி செய்வதாக தவெகவினர் வந்தால் காவல்துறையை அணுகுங்கள்!"- எடப்பாடி பழனிசாமி

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி ஒருவருக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.“கன்னிய... மேலும் பார்க்க

"வனவிலங்குகள், தெருநாய்கள், பூனைகளை பிடித்து ஆய்வக சோதனைகள்.!"- மத்திய அரசுக்கு தயாநிதி மாறன் கடிதம்

மத்திய அரசு புதிய விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தை அறிமுகப்ப்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் மத்திய அமைச்சர் ராஜீவ... மேலும் பார்க்க

‘அண்ணாமலை தன் அறிவுஜீவித்தனத்தை அமித் ஷா மோடியிடம் காட்டுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்’ - காங்கிரஸ்

"பா.ஜ.க தலைவர்களிடம் பம்மாத்து காட்ட மட்டும் பயன்படுத்துங்கள். பா.ஜ.க-வின் பின் ஒளிந்து கொண்டு அறிவுஜீவியாக காட்டிக்கொண்ட அண்ணாமலையின், உங்கள் அறிவுஜீவி சாயம் வெளுத்துக்கொண்டிருக்கிறது" எனச் சாடியிருக... மேலும் பார்க்க

ஒன்றிய - மாநில உறவு குறித்து திமுக அரசு அமைத்த கமிட்டி; கிடப்பில் போடும் தவெக அரசு? - பின்னணி என்ன?

ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு குறித்த சிக்கல்களை ஆராய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட கமிட்டியை தவெக அரசு கிடப்பில் போடுவதாகவும், கமிட்டிய... மேலும் பார்க்க

"வாக்களித்த பெண்களுக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு அவர்களுக்குத் தரும் பரிசா?"- கனிமொழி காட்டம்

சாத்தான்குளத்தில் வீடு புகுந்து தாயை வெட்டிக் கொன்று இரண்டு பெண் குழந்தைகளை கடத்திய சம்பவம், தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த முத... மேலும் பார்க்க

`விஜய்க்கு தனுஷ் போட்டியே கிடையாது; ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா என்பதை..!' - மரியவில்சன் சொல்வதென்ன?

நிதியமைச்சர் மரியவில்சன் இன்று (அக்.23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "தனுஷ் அரசி... மேலும் பார்க்க