சிறுவயதில் தந்தை கொடுத்த கடின பயிற்சி..! ஆஸி. அறிமுக வீரரின் சுவாரசியம்!
வெட்டிப்பெருமாளகரம் ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கேடயம்
2023-2024 ஆம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளியாக வெட்டிப்பெருமாளகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
தோ்வு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு
பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சுழற்கேடயம் பெற்றது.
இதையொட்டி, பள்ளி மேலாண்மைக் குழு சாா்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவா் தென்னரசி பாண்டியன் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஜான்சிராணி, துணைத் தலைவா் அருள்ஜோதி, உறுப்பினா் ஆசிரியா் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உறுப்பினா் கவிதைத்தம்பி வரவேற்றாா்.
பள்ளிக்கு பெருமைதேடித் தந்த தலைமை
ஆசிரியா் பொன். மலா்க்கொடி மற்றும் ஆசிரியா்களை பள்ளி மேலாண்மைக் குழுவினா் பாராட்டி கெளரவித்தனா்.