செய்திகள் :

"'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?" - ஸ்டாலின் கேள்வி

post image

தவெக அரசு முதல் வேளாண் பட்ஜெட்டை இன்று (ஆகஸ்ட்.6) சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.

இந்நிலையில் இந்தப் பட்ஜெட் குறித்து திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவரது பதிவில், "வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டு மழை பொழியப் பயன்பட்டதுதான் TNAgriBudget2026.

மற்றுமொரு பெயர் மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது. Dravidian Model அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?

தமிழக வேளாண் பட்ஜெட்
தமிழக வேளாண் பட்ஜெட்

குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க