செய்திகள் :

காவிரி விவகாரம் குறித்து பேச ஒத்திவைப்புத் தீர்மானம்; உதயநிதியின் திட்டம் என்ன?

post image

தவெக அரசு முதல் வேளாண் பட்ஜெட்டை இன்று (ஆகஸ்ட்.6) சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.

இந்நிலையில் இந்தப் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது விவசாயிகள்தான். அவர்களுக்கு ஆதரவு கொடுத்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகத்தான் இன்று கறுப்புச் சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தோம்.

தமிழக வேளாண் பட்ஜெட்
தமிழக வேளாண் பட்ஜெட்

திமுக ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்திருந்தோமோ, அதே திட்டங்களைத்தான் பெயரை மாற்றி புதுத்திட்டங்கள் போல வேளாண் பட்ஜெட்டை அறிவித்திருக்கிறார்கள்.

இந்தப் பட்ஜெட்டில் உருப்படியாக எதுவுமே கிடையாது. குறிப்பாக தேர்தல் வாக்குறுதியின்போது இப்போது இருக்கக்கூடிய முதலமைச்சர் முழு பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சொன்னார். ஆனால் ஆட்சிக்கு வந்து எதுவும் செய்யவில்லை.

மேகதாது காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா செல்கிறேன் என்கிறார். அங்குள்ள முதலமைச்சர் வர வேண்டாம் என்கிறார். மேகதாது விஷயத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று நாங்கள் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் ஒரே கருத்துடன் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவோம் என்று இந்த அரசுக்கு திமுக சார்பாகக் கோரிக்கை வைத்துக்கொண்டே இருக்கிறோம். அதற்கும் முதலமைச்சர் வாயைத் திறந்து பதில் சொல்ல மாட்டேங்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

காவிரி விவகாரம் குறித்துப் பேச நாளை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர கடிதம் வழங்கியுள்ளோம். அப்போது நிறைய கேள்விகள் கேட்போம். முடிந்தால், தைரியம் இருந்தால் முதலமைச்சர் வாயைத் திறந்து பதில் சொல்லட்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக எப்போதும் துணை நிற்கும்" என்று பேசியிருக்கிறார்.

திண்டுக்கல்: 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் | Photo Album

கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப... மேலும் பார்க்க

Agri Budget: ``ஸ்டிக்கர் பட்ஜெட்: '-0' மதிப்பெண்தான் கொடுக்க முடியும்" - எடப்பாடி பழனிசாமி

இன்று சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்ப்பட்டது. இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்திருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பா... மேலும் பார்க்க

"'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?" - ஸ்டாலின் கேள்வி

தவெக அரசு முதல் வேளாண் பட்ஜெட்டை இன்று (ஆகஸ்ட்.6) சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. இந்நிலையில் இந்தப் பட்ஜெட் குறித்து திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்ட... மேலும் பார்க்க

"தமிழ்த்தாய் வாழ்த்தை முதன்மையாகப் பாட வேண்டும்"- ஆளுநருக்கு தமிழக எம்பி-க்கள் கோரிக்கை கடிதம்

தமிழ்நாட்டில் பல்கலைக்கழக மற்றும் அரசு விழாக்களின் தொடக்கத்தில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடும் நடைமுறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான திருமாவளவன், மா... மேலும் பார்க்க

பாஜக-விடம் பணிந்தார் முதல்வர் ரங்கசாமி! - புதுச்சேரியில் முடிவுக்கு வந்த அமைச்சரவை பஞ்சாயத்து

புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணியுடன்2026தேர்தலில் வெற்றிபெற்ற ரங்கசாமி,மே மாதம்13-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார். அன்றைய தினம் அவருடன் இரண்டு அமைச்சர்களும்,ஜூன்17-ம் தேதி மூன்று அமைச்சர்களும் பதவிய... மேலும் பார்க்க

'கைது வேண்டாம்' ; சொல்லியும் கேட்காத முதல்வர் முதல் பி.கே வெற்றி, குஷியில் சீமான் வரை! | கழுகார்

கேட்காத முதல்வர்!'கைது வேண்டாம்' எடுத்துக்கூறிய அதிகாரிகள்...தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் நடிகை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தை உடனடியாக முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள் அதிகாரிகள். ஆரம்... மேலும் பார்க்க