செய்திகள் :

தனியாக வசித்த மூதாட்டியைக் கொன்று நகை, பணம் திருட்டு - காதலனுடன் சேர்ந்து இளம்பெண் செய்த கொடூரம்!

post image

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள சாம்பார் என்ற இடத்தில் கம்லா தேவி (65) என்ற பெண் தனியாக வாழ்ந்து வந்தார். அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் திருட்டு போய் இருந்தது. இது குறித்து கமலா தேவியின் மருமகன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்யப்பட்டது. இதில் கமலா தேவி வீட்டிற்கு அவரது உறவுக்கார பெண் லலிதா என்பவர் அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோது அவர்தான் இக்கொலையில் தொடர்பு கொண்டு இருக்கிறார் என்பது தெரிய வந்தது.

லலிதாவும், அவரது காதலன் பப்லு என்பவரும் சேர்ந்து இரவில் இக்கொலையை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி இருக்கின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், கொலையாளிகள் இரண்டு பேரும் முதலில் கொலைக்கான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். கமலா தேவிக்கு லலிதா நெருங்கிய உறவு என்பதால் லலிதா அடிக்கடி கமலாதேவி வீட்டிற்கு சென்று வரக்கூடியவர் என்பதால் அவருக்கு வீட்டில் பணம், நகைகள் எங்கு இருக்கிறது என்று தெரிந்து இருந்தது.

திருமணமான லலிதாவும் அவரது காதலனும் தங்கள் ஆடம்பர வாழ்க்கை, பொழுதுபோக்கு மற்றும் பார்ட்டிகளுக்கு பணம் தேவைப்பட்டதால் அவர்கள் இரண்டு பேரும் மிகவும் தெளிவாக திட்டம் தீட்டி இக்கொலையை செய்துள்ளனர். திருடப்பட்ட தங்க வளையல்கள், தங்க காதணிகள், ஒரு மூக்குத்தி, வெள்ளி கொலுசுகள், வெள்ளி நாணயங்கள், பணம், ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஆதார் அட்டைகள் உட்பட திருடப்பட்டதில் கணிசமான பகுதியை போலீஸார் மீட்டனர். லலிதா மற்றும் அவரது காதலனை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு பேரையும் கைது செய்ய கண்காணிப்பு கேமராக்கள் தான் முக்கிய பங்கு வகித்தன.

கேரள சிவசேனா செயலாளர் கொலை வழக்கு; குமரியில் இருவர் கைது; 3 பேரை தேடும் போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கண்ணகோடு பகுதி அருகே இறந்த நிலையில் ஒருவரின் உடல் மிதப்பதாக பொதுமக்கள் கடந்த 31-ம் தேதி மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு... மேலும் பார்க்க

தருமபுரி : அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9 மாணவர்கள் பாதிப்பு! - தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9 மாணவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தருமபுரிதருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே தொ.காணிகரஅ... மேலும் பார்க்க

பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை - கோவை போலீஸ் கைது!

திருப்பூரை சேர்ந்தவர் மணிவேந்தன்(32). காவலரான இவர், கோவை மாநகர காவல் துறைக்கு உட்பட்ட போத்தனூர் விசாரணைப் பிரிவு காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக உள்ளார். அவர் வேலை விஷயமாக ஆகஸ்ட் 5ம் தேதி காலை பொள்ளாச... மேலும் பார்க்க

கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்த இளம்பெண்; சூட்கேசில் பிணமாக மீட்பு - போலீஸ் விசாரணை!

பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோடிகுமாரி. இப்பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது ஊரைச் சேர்ந்த ரிஷப்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.... மேலும் பார்க்க

கரூர்: காவிரியில் மூழ்கி மூவர் பலியான சோகம்; திதி கொடுக்கச் சென்றபோது விபரீதம்; என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், நரசிம்மபுரம் பகுதியைச் சேர்ந்த அருணன் (வயது:62), சுரேஷ் (வயது: 61) ஆகிய அண்ணன் - தம்பி மற்றும் அவர்களது உறவினரான ஸ்ரீனிவாசன் (வயது: 64) உள்ளிட்ட 7 பேர், அருணன் மற்றும் சுரேஷின் தாயாருக... மேலும் பார்க்க

போக்சோ: சிறுமிக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு - கடமைத் தவறிய 6 போலீஸாரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம்!

வேலூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம், மோகனப்பிரியா என்பவரின் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டு சந்தோஷ்குமார் என்பவரால் பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும்,... மேலும் பார்க்க