செய்திகள் :

Dhanush: "அதுதான் சந்தோஷமான நாள்கள் என அப்போ எனக்கு தெரியல"- தனுஷ் ஷேரிங்

post image

நடிகர் தனுஷ் சென்னை சாலிகிராமத்தில் தான் படித்த பள்ளிக்கு தனது சொந்த செலவில் 3 தளங்கள் கொண்ட கட்டடத்தைக் கட்டித் தந்திருக்கிறார்.

அந்தக் கட்டடத்திற்கு 'தனுஷ் பிளாக்' எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

Dhanush - Thai Sathya School
Dhanush - Thai Sathya School

இந்தக் கட்டட திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தத் திறப்பு விழாவில் தனுஷ், அவருடைய சகோதரிகள், பேட்ச் மாணவர்கள், அவருடைய கிளாஸ்மேட்டும் ஒளிப்பதிவாளருமான ஏ.குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திறப்பு விழாவில் மாணவர்களிடம் பேசிய தனுஷ், "காலையில் இருந்து மாலை வரை கைதி மாதிரி ஒரே இடத்தில் இருக்கிறோமே என்று ஸ்கூலுக்கு வரும்போதெல்லாம் நினைப்பேன். எப்போது 3.30 மணி ஆகும், ஸ்கூலை விட்டு போகலாம் என்றுதான் தோன்றும்.

மணி அடித்தால் ஒரு தனி சந்தோஷமாக இருக்கும். ஸ்கூல் முடிந்ததும் முதல் ஆளாக நான்தான் வெளியே செல்வேன். அப்படி நான் போகும்போதெல்லாம் தெரியவில்லை, இங்கு இருப்பது தான் சந்தோஷமான நாள்கள் என்று...

Dhanush - Thai Sathya School
Dhanush - Thai Sathya School

உங்கள் எல்லோருக்கும் ஒன்று சொல்கிறேன். ஸ்கூலில் இருக்கக்கூடிய நாள்கள் தான் மிகவும் சந்தோஷமான நாள்கள். எப்போது ஸ்கூல் முடியும் என்று கடந்து சென்று விடாமல் என்ஜாய் செய்யுங்கள். இந்த மாதிரி எனக்கு யாராவது சொல்லி இருந்தால் ஸ்கூலில் இருந்த ஒவ்வொரு தருணத்தையும் நான் என்ஜாய் செய்திருப்பேன்" என்று பேசியிருக்கிறார்.

Dhanush: "தாய் மொழி தெரியவில்லை என்றால் அது அவமானம்தான்" - நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் சென்னை சாலிகிராமத்தில் தான் படித்த பள்ளிக்கு தனது சொந்த செலவில் 3 தளங்கள் கொண்ட கட்டடத்தைக் கட்டித் தந்திருக்கிறார். அந்தக் கட்டடத்திற்கு 'தனுஷ் பிளாக்' எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ... மேலும் பார்க்க

Kollywood: அஜித் டு கார்த்திக் சுப்புராஜ்; களைகட்டும் அப்டேட்கள் - இது கோலிவுட் புதிய அறிவிப்புகள்!

கடந்த மூன்று நாட்களாகத் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. எதிர்பார்க்கப்பட்ட படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு, புதிய படங்களின் அறிவிப்பு எனப் பல அப்டேட்கள் அ... மேலும் பார்க்க

Dhanush: 'தனுஷ் ப்ளாக்' - படித்த பள்ளிக்கு கட்டிட உதவி செய்து கொடுத்த தனுஷ்!

நடிப்பைத் தாண்டி பொதுச் சேவைகளையும் தற்போது நடிகர் தனுஷ் அதிகமாகவே செய்து வருகிறார். அன்னதானம், ரத்த தான உதவி எனச் சமீபத்தில் தனுஷ் ரசிகர்கள் நடத்திய நிகழ்வுகள் அனைத்தும் பேசுபொருளாயின. தற்போது தான் ப... மேலும் பார்க்க

Akshara Haasan: "அதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது!" - அக்ஷரா ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் நடித்திருக்கும் 'சிமுலேக்ரா' (Simulacra) திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் நேரடியாக வெளியானது. இந்தப் படத்திற்காக அளித்த நேர்காணல் ஒன்றில் தனது பெற்றோரின் கலைப... மேலும் பார்க்க

மும்பை எக்ஸ்ப்ரஸ் : க்ரே(ட்) காமெடி! | `சினி'ஸ்கோப் 12

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 12மும்பை எக்ஸ்ப்ரஸ்மூன்று உத்தமமான ஏழைகள், ஒரு சிறுவனைக் கடத்திவ... மேலும் பார்க்க

Suriya - Jyothika: "நாங்கள் வீட்டில் திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதில்லை!" - சூர்யா - ஜோதிகா

சூர்யா - ஜோதிகா தம்பதி, தங்களின் திருமண வாழ்வில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறார்கள். அதையொட்டி அவர்கள் இருவரும் இணைந்து 'ஹாலிவுட் ரிப்போர்ட்டர்' ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார்கள். அந்தப் ப... மேலும் பார்க்க