செய்திகள் :

கேரள சிவசேனா செயலாளர் கொலை வழக்கு; குமரியில் இருவர் கைது; 3 பேரை தேடும் போலீஸ்!

post image

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கண்ணகோடு பகுதி அருகே இறந்த நிலையில் ஒருவரின் உடல் மிதப்பதாக பொதுமக்கள் கடந்த 31-ம் தேதி மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த உடலில் பல இடங்களில் சிவசேனா கட்சி சம்பந்தமாக பச்சை குத்தியிருந்தது. மேலும் சில இடங்களில் காயங்களும் காணப்பட்டன். ​அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில் இறந்தவர், கொல்லங்கோடு அருகே கேரள பகுதியான செங்கவிளையை சேர்ந்த சதீசன் மகன் அதுல் (32) என்பது தெரியவந்தது. அதுல் சிவசேனா கட்சியின் கேரள மாநில செயலாளராக இருந்துவந்தார். இதையடுத்து  கேரள மாநில சிவசேனா கட்சி நிர்வாகிகள் மார்த்தாண்டம் வந்து டி.எஸ்.பி-யிடம் குற்றவாளிகளைக் கைது செய்ய கோரிக்கை வைத்தனர். போலீஸார் அதுலின் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையில் அதுலின் தலையில் ஆழமான காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆயுதங்களால் தலையில் தாக்கியதில் அதுல் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை அவரது உடலைப் பெற மாட்டோம் என சிவசேனா கட்சியினரும், உறவினர்களும் கூறியதால், அதுலின் உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள்

இதையடுத்து மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிவசேனா பிரமுகரின் கார் சென்ற வழித்தடங்களில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் உண்ணாமலைக்கடை ஆர்.சி தெருவைச் சேர்ந்த நிதீஷ் (29) மற்றும் மாங்கரை கம்பளார் பகுதியைச் சேர்ந்த பெர்லின் ஜியோ (27) ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் ​விசாரணை நடத்தியதில், சம்பவத்தன்று அதுலும், குழித்துறை கல்லுகெட்டி பகுதியைச் சேர்ந்த தந்தை, மகன் உட்பட 4 பேர் சேர்ந்து குழித்துறையில் ஒரு பாருக்கு சென்று மது அருந்தியதாகவும். பின்னர் கல்லுகெட்டி சென்றதாகவும். அங்கு வைத்து ஏதோ பிரச்னை காரணமாக அதுல் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் அதுலின் உடலை மூன்று பேருமாக காரில் கொண்டுசென்று, மார்த்தாண்டத்தை அடுத்த கண்ணகோடு ரயில்வே மேம்பாலத்திலிருந்து உடலை ஆற்றில் வீசியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட அதுல்

பின்னர் அதுலின் காரை சிதறால் மலைக்கோவில் அருகில் கொண்டு விட்டுவிட்டு மாங்கரை பகுதியைச் சேர்ந்த பெர்லின் ஜியோவை வரவழைத்து அவரது காரில் ஏறி தப்பிச் சென்று உள்ளனர். இதில், கொலையாளிகள் தப்பிச் செல்ல உதவிய பெர்லின் ஜியோ மற்றும் கொலை குற்றவாளிகளுக்கு உதவியதாக நிதீஷ் என்பவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையில் நேரடியாக தொடர்புடைய தந்தை, மகன் மற்றொருவர் என மூவரின் விபரங்கள் போலீஸாருக்கு கிடைத்துள்ளதாகவும், மூவரும் கேரளாவிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் தனிப்படை போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர்கள் மூவரும் சிக்கினால்தான் கொலைக்கான காரணம் மற்றும் கொலை நடந்த விதம் குறித்து தெரிய வரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தருமபுரி : அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9 மாணவர்கள் பாதிப்பு! - தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9 மாணவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தருமபுரிதருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே தொ.காணிகரஅ... மேலும் பார்க்க

பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை - கோவை போலீஸ் கைது!

திருப்பூரை சேர்ந்தவர் மணிவேந்தன்(32). காவலரான இவர், கோவை மாநகர காவல் துறைக்கு உட்பட்ட போத்தனூர் விசாரணைப் பிரிவு காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக உள்ளார். அவர் வேலை விஷயமாக ஆகஸ்ட் 5ம் தேதி காலை பொள்ளாச... மேலும் பார்க்க

கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்த இளம்பெண்; சூட்கேசில் பிணமாக மீட்பு - போலீஸ் விசாரணை!

பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோடிகுமாரி. இப்பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது ஊரைச் சேர்ந்த ரிஷப்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.... மேலும் பார்க்க

கரூர்: காவிரியில் மூழ்கி மூவர் பலியான சோகம்; திதி கொடுக்கச் சென்றபோது விபரீதம்; என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், நரசிம்மபுரம் பகுதியைச் சேர்ந்த அருணன் (வயது:62), சுரேஷ் (வயது: 61) ஆகிய அண்ணன் - தம்பி மற்றும் அவர்களது உறவினரான ஸ்ரீனிவாசன் (வயது: 64) உள்ளிட்ட 7 பேர், அருணன் மற்றும் சுரேஷின் தாயாருக... மேலும் பார்க்க

போக்சோ: சிறுமிக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு - கடமைத் தவறிய 6 போலீஸாரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம்!

வேலூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம், மோகனப்பிரியா என்பவரின் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டு சந்தோஷ்குமார் என்பவரால் பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும்,... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை நினைவு நாள்: சாலைகளில் எல்லை மீறிய இளைஞர்கள், திணறிய காவல்துறை!

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் கொங்கு நாட்டு பாளையக்காரர்களில் ஒருவருமான தீரன் சின்னமலை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படைகளை எதிர்த்து காவிரி கரை போர், ஓடாநிலை போர், அரச்சலூர் போர் ஆகிய போர்களை நட... மேலும் பார்க்க