செய்திகள் :

மும்பை: வேலையிலேயே இல்லாத 10 கற்பனை போலீஸார்; ரூ.6.5 கோடி சம்பளம் பட்டுவாடா செய்து மோசடி

post image

மும்பை காவல் துறையில் இல்லாத ஒருவரை இருப்பது போன்று காட்டி மோசடி செய்யப்பட்டுள்ளது. காவல் துறையில் இல்லாத 10 பேர் உத்தியோகபூர்வ பதிவேடுகளில் ஊழியர்களாக பலமுறை காட்டப்பட்டு, அவர்களின் கணக்கில் மாதாந்திர சம்பளம் வரவு வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக வந்த ரகசிய தகவலை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரிய வந்துள்ளது. விசாரணையில் சம்பள பரிவர்த்தனைகள் முதன்மையாக டிசம்பர் 2019 முதல் பிப்ரவரி 2020 மற்றும் ஜூன் முதல் செப்டம்பர் 2020 வரை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், ரூ.6.5 கோடி சம்பளம் பட்டுவாடாவும் நடந்திருக்கிறது.

10 நபர்கள் உண்மையான பணியாளர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்க, வருகைப் பதிவேடுகள் மற்றும் பிற பதிவுகளை உருவாக்குவதற்கு கிளார்க் நிலை ஊழியர்கள் ஒத்துழைத்து இருக்கவேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதில் நிர்வாகம் மற்றும் சம்பள பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முன்னாள் நிர்வாக அதிகாரிகளான ராம்கிஷன் கோஸ்வாமி, நாகேஷ் தல்வடேகர் மற்றும் விஜய சவான் ஆகியோருடன் தலைமை எழுத்தர் அஜய் ரத்தோட் மற்றும் மூத்த எழுத்தர் அமோல் மெஷ்ராம் ஆகியோர் பெயரும் சந்தேகிக்கப்படுகிறது.

போலியான பணி அடையாள அட்டைகள் மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட அடையாளங்களை வரையறுத்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், ராம்தாஸ் போக்லே, சுதாகர் கடம், சர்ஜு யாதவ், பகவத் போசலே, குணாஜி காவ்கர், மகாதேவ் ஹல்டன்கர், ராஜேந்திர சோனார், உத்தம் தோரட், சூர்யகாந்த் பாட்டீல் மற்றும் பாண்டுரங் கடம் ஆகிய 10 கற்பனை ஊழியர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. போலீஸ் துறையில் நடந்துள்ள இந்த ஊழல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

80 மீட்டர் தேசியக் கொடி... உலகச் சாதனை படைத்த சேலம் பள்ளி மாணவர்கள்!

பெற்றோரின் வழிகாட்டுதலுடன், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசைத்தறியில் 80 மீட்டர் தேசியக் கொடியை நெய்து உலக அங்கீகாரம் பெற்ற அண்ணன்–தங்கையான தமிழ்ச்செல்வன் - செந்தமிழமுதுவின் சாதனை கவனம் ஈ... மேலும் பார்க்க

பகலில் படிப்பு, இரவு பெட்ரோல் பம்பில் வேலை; கல்வியைத் தொடர போராடும் மும்பை மாணவியின் நெகிழ்ச்சி கதை

மும்பையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது படிப்புக்காக இரவு 10 மணி வரை பெட்ரோல் பம்ப் ஒன்றில் வேலை செய்வது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மும்பையில் உள்ள ஷெல் பெட்ரோல் பம்ப் ஒன்றில் வினீத் என்பவர் தனது... மேலும் பார்க்க

"தேவேந்திர பட்னாவிஸ் எதிர்காலத்தில் பிரதமராவார்" - மகாராஷ்டிரா முதல்வரின் சித்தப்பா நம்பிக்கை

மகாராஷ்டிராவில் முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் மத்திய அமைச்சராவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புனேயில் தேவேந்திர பட... மேலும் பார்க்க

"இந்தியாவை நேசித்தால் ஏன் துபாயில் வசிக்கிறீர்கள்?" - விவேக் ஓப்ராய், மாதவனுக்கு ராஜ்தாக்கரே கேள்வி

நடிகர் ஆர்.மாதவன் தனது மகனின் நீச்சல் பயிற்சி உள்ளிட்ட காரணங்களால் துபாயில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்டார். இதே போன்று மற்றொரு பாலிவுட் நடிகரான விவேக் ஒபேராயும் இதே போன்று தொழில் நிமித்தமாக துபாயில் ... மேலும் பார்க்க

தருமபுரி ஒகேனக்கல் அழகை ரசித்த சுற்றுலாப் பயணிகள்! | பரிசல் காட்சிகள்

தருமபுரி ஒகேனக்கல் தருமபுரி ஒகேனக்கல்தருமபுரி ஒகேனக்கல்தருமபுரி ஒகேனக்கல்தருமபுரி ஒகேனக்கல்தருமபுரி ஒகேனக்கல்தருமபுரி ஒகேனக்கல்தருமபுரி ஒகேனக்கல்தருமபுரி ஒகேனக்கல்தருமபுரி ஒகேனக்கல்தருமபுரி ஒகேனக்கல்த... மேலும் பார்க்க