செய்திகள் :

பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை - கோவை போலீஸ் கைது!

post image

திருப்பூரை சேர்ந்தவர் மணிவேந்தன்(32). காவலரான இவர், கோவை மாநகர காவல் துறைக்கு உட்பட்ட போத்தனூர் விசாரணைப் பிரிவு காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக உள்ளார். அவர் வேலை விஷயமாக ஆகஸ்ட் 5ம் தேதி காலை பொள்ளாச்சிக்கு சென்றார். பின்னர் காவலர் மணிவேந்தன் பொள்ளாச்சியில் இருந்து தனியார் பேருந்து மூலம் கோவை திரும்பினார். அப்போது அவர் காவலர் சீருடையில் இருந்தார். இந்நிலையில் அவர் பயணித்த பேருந்து கிணத்துக்கடவு நிறுத்தத்தில் நின்றபோது, கல்லூரி மாணவிகள் பலர் ஏறியுள்ளார்கள். அப்போது மணிவேந்தன் கோவையைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவிக்கு பேருந்தில் ஏற உதவி செய்தார். பின்னர் அந்த மாணவி பேருந்தில் ஏறி உள்ளே வந்தார்.

அச்சமயத்தில் பேருந்தில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.  அப்போது அந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல் காவலர் மணிவேந்தன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், செய்வது அறியாமல் திகைத்தார். பின்னர் மதுக்கரை காவல் எல்லையில் உள்ள ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன், மாணவி அதிலிருந்து கீழே இறங்கினார். அங்கு இருந்த சக மாணவிகளிடம் தெரிவித்தார். அவர்கள் காவலரை கண்டித்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவி தன் பெற்றோரிடமும் தெரிவித்தார்.  இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பாலியல் சீண்டல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மணிவேந்தனை கைது செய்தனர். மாணவிக்குப் பாலியல் தொல்லை தந்த காவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்த இளம்பெண்; சூட்கேசில் பிணமாக மீட்பு - போலீஸ் விசாரணை!

பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோடிகுமாரி. இப்பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது ஊரைச் சேர்ந்த ரிஷப்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.... மேலும் பார்க்க

கரூர்: காவிரியில் மூழ்கி மூவர் பலியான சோகம்; திதி கொடுக்கச் சென்றபோது விபரீதம்; என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், நரசிம்மபுரம் பகுதியைச் சேர்ந்த அருணன் (வயது:62), சுரேஷ் (வயது: 61) ஆகிய அண்ணன் - தம்பி மற்றும் அவர்களது உறவினரான ஸ்ரீனிவாசன் (வயது: 64) உள்ளிட்ட 7 பேர், அருணன் மற்றும் சுரேஷின் தாயாருக... மேலும் பார்க்க

போக்சோ: சிறுமிக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு - கடமைத் தவறிய 6 போலீஸாரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம்!

வேலூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம், மோகனப்பிரியா என்பவரின் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டு சந்தோஷ்குமார் என்பவரால் பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும்,... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை நினைவு நாள்: சாலைகளில் எல்லை மீறிய இளைஞர்கள், திணறிய காவல்துறை!

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் கொங்கு நாட்டு பாளையக்காரர்களில் ஒருவருமான தீரன் சின்னமலை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படைகளை எதிர்த்து காவிரி கரை போர், ஓடாநிலை போர், அரச்சலூர் போர் ஆகிய போர்களை நட... மேலும் பார்க்க

ஹரியானா: பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை சரமாரியாகக் குத்திக் கொலை; முகமூடி அணிந்தவரின் வெறிச்செயல்

ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகில் உள்ள சிக்ரோனா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சந்தியா(29) என்ற ஆசிரியைப் பணியாற்றி வந்தார். பள்ளிக்குச் சற்று தொலைவில்தான் போலீஸ் நிலையம் இருக்கிறது. ஆசிரியை ச... மேலும் பார்க்க

"என் மகனை உயிருடன் வைத்திருக்க இதைச் செய்தேன்"- ஐஐடி-யில் தற்கொலை செய்த மகனுக்கு கோயில் கட்டிய தந்தை

கடந்த 2024ம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் அக்ஷித் பூக்யா என்ற இரண்டாம் ஆண்டு மாணவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐ.ஐ.டி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் ஒருக்கி... மேலும் பார்க்க