செய்திகள் :

TN Budget 2026: `பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பா?' - இல்லை என விளக்கும் ராஜ்மோகன்!

post image

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக அரசு 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது.

இதில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44, 527 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. பலரும் 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 46,767 கோடியும், இடைக்கால பட்ஜெட்டில் 48,534 ரூபாயும் ஒதுக்கப்பட்டிருந்தது.

விஜய் - மரிய வில்சன்
விஜய் - மரிய வில்சன்

தற்போது தவெக அரசு கல்வித்துறைக்கான பட்ஜெட்டை குறைத்திருக்கிறது என கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது!

2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 46,767 கோடி ரூபாய். இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டும் தான்.

இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்து திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 48,534 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது.

அதாவது, 2025-26 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் 6003 கோடி ரூபாய் காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டுமே.

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

வெற்றிக்கழக ஆட்சி அமைந்ததும் அதை முறையாக சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் 2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதைக்குறித்து நிதித்துறை செயலாளர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

வெற்றிக்கழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 44,527 கோடி ரூபாயை மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி திறம்பட கையாண்டு, முழுமையான பலன்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளிக்கல்வி நிர்வாகத்தையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த உண்மையான கூடுதல் ஒதுக்கீடு, பள்ளிக்கல்வித்துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும்" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

TN Budget: `வருந்தத்தக்கது; மக்களின் எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொள்ளவில்லை' - சிபிஐ வீரபாண்டியன்

‘தவெக அரசின் நிதிநிலை அறிக்கை சில பிரிவுகளில் முன்னேற்றம் காண வழிவகுக்கும். எனினும் பெரும் பகுதி, மக்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொள்ளவில்லை’ என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு... மேலும் பார்க்க

ஆட்சி மாறியும் அரசின் கடன் தொடர்கிறது? - தவெக அரசின் ரூ.1.73 லட்சம் கோடி கடன் திட்டம்!

2026-2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு அரசு புதிய கடனாக ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 445 கோடி பெறத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில், ரூ.51 ஆயிரத்து 971 கோடி மதிப்பிலான பழ... மேலும் பார்க்க

TN Budget: 'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு! - ஸ்டாலின்

பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன்மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் அந்த எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது. வெற்றிக் கழகம் சமர்ப்பித்த வெற்று பட்ஜெட். முதலமைச்சர் தலைமை சாதாரண மக்களின் எ... மேலும் பார்க்க

TN Budget 2026: "பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாக இருந்தது!" - பிரேமலதா விஜயகாந்த்

தவெக அரசின் 2026- 2027 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்."தமிழ்நாட்டின் மிக முக்கிய பிரச்னையான விவசாயிகளின் பயிர்கட... மேலும் பார்க்க

"தவெகவின் பட்ஜெட்டிற்கு ஜீரோ மதிப்பெண்; ஆனால், நிதியமைச்சருக்கு திமுகவின் நன்றி!" - உதயநிதி ஸ்டாலின்

2026-27 நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இது தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகும். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 3) தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைப் பேச்சு... ந... மேலும் பார்க்க

’தவெக-வின் முதல் பட்ஜெட் கடந்த ஆட்சிகளின் காப்பி பேஸ்ட் பட்ஜெட்’ – வானதி சீனிவாசன் சாடல்

தவெக அரசின் பட்ஜெட் தொடர்பாக பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் கடந்த ஆட்சி... மேலும் பார்க்க