செய்திகள் :

TN Budget 2026: "பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாக இருந்தது!" - பிரேமலதா விஜயகாந்த்

post image

தவெக அரசின் 2026- 2027 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"தமிழ்நாட்டின் மிக முக்கிய பிரச்னையான விவசாயிகளின் பயிர்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வது குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. ஒரு சில கடன் தள்ளுபடி மட்டுமே செய்திருக்கிறார்கள்.

பட்ஜெட்: விஜய் - மரிய வில்சன்
பட்ஜெட்: விஜய் - மரிய வில்சன்

முழு கடன் தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. நீர் மிகை மாநிலமாக தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அதற்கான அறிவிப்பு எதுவும் வரவில்லை.

முதலில் தமிழ்நாட்டின் நதிகளை இணைப்பதற்கும், தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கும் எந்த விதமான அறிவிப்புகளும் இல்லை. வேலைவாய்ப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

வேலை இல்லை, வேலை இல்லை என்று மக்கள் சொல்வதை நம்மால் கேட்க முடிகிறது. எனவே ஒவ்வொரு மாவட்டத்திற்குமான தொழிற்சாலைகள் அமைப்பது குறித்தான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

10 லட்சம் ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டில் கடன் இருக்கிறது. இந்தக் கடன் சுமையைக் குறைப்பதற்கு என்ன திட்டங்கள் இருக்கிறது என்று அறிவிக்கவில்லை. பல லட்சம் கோடிகள் இன்று கடனாக மட்டும் கட்டிக்கொண்டிருக்கிறோம்.

TN Budget 2026
TN Budget 2026

பட்ஜெட்டில் பாராட்டக்கூடிய விஷயம் என்னவென்றால் நகர்புற மேம்பாட்டிற்காக கூவம் நதியை சுத்தம் செய்வது சாலைகளை மேம்படுத்துவது, எலெக்ட்ரானிக் பேருந்துகள் போன்ற சில அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாக இருந்தது.

ஆனால் இதெல்லாம் இன்று சொல்லாக இருந்தது. செயல் வடிவமாக வரும்போது தேமுதிக அதனை நிச்சயம் வரவேற்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

"தவெகவின் பட்ஜெட்டிற்கு ஜீரோ மதிப்பெண்; ஆனால், நிதியமைச்சருக்கு திமுகவின் நன்றி!" - உதயநிதி ஸ்டாலின்

2026-27 நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இது தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகும். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 3) தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைப் பேச்சு... ந... மேலும் பார்க்க

’தவெக-வின் முதல் பட்ஜெட் கடந்த ஆட்சிகளின் காப்பி பேஸ்ட் பட்ஜெட்’ – வானதி சீனிவாசன் சாடல்

தவெக அரசின் பட்ஜெட் தொடர்பாக பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் கடந்த ஆட்சி... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் வாங்க செயலி; தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பு - விவரம் என்ன?

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், அதைத் தடுப்பதற்காக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம்... மேலும் பார்க்க

"காவிரிக்காக 22 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கினோம் நாங்கள்; ஆனால் இந்த அரசு..!"- எடப்பாடி பழனிசாமி

தவெக அரசு தங்களது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியதாவது...லீக்கேஜ்"நிர்வாகத்தில் ந... மேலும் பார்க்க

`பழனிசாமி தான் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவர்'- சபாநாயகர் அதிரடி அறிவிப்பு; அதிருப்தி குழுவின் நிலை?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து இப்போது வரை அதிமுக-வில் உட்கட்சிப் பூசல் முடிந்தபாடில்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

பயன்படுத்த முடியாத நிலையில் பாரதியார் பல்கலைக்கழகப் பேருந்து நிறுத்தம்; சிரமப்படும் பயணிகள்!

கோவை – மருதமலை சாலையில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் அருகேயுள்ள பேருந்து நிறுத்தம், போதிய பராமரிப்பின்றி காணப்படுவதால், மாணவர்கள், பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள... மேலும் பார்க்க