செய்திகள் :

`எஸ்.பி.வேலுமணியை அதிமுக பொதுச்செயலாளராக்கு சாமி' - குண்டம் இறங்கி வேண்டிய கோவை நிர்வாகி!

post image

அ.தி.மு.க-விற்குள் உட்கட்சிப் பூசல் அதிகரித்து வரும் நிலையில், எஸ்.பி. வேலுமணியை அக்கட்சியின் பொதுச்செயலாளராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க. கோவை குறிச்சி பகுதிச் செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான செந்தில்குமார் என்பவர், குறிச்சி குண்டத்து மாகாளியம்மன் கோயிலில் எஸ்.பி.வேலுமணி பேனருடன் குண்டம் இறங்கி வேண்டினார்.

இது குறித்து நம்மிடம் பேசிய செந்தில்குமார், ``அ.தி.மு.க தற்போது இருக்கும் நிலையில், நல்ல ஆக்கபூர்வமான இளைஞரான எஸ்.பி.வேலுமணி போன்ற ஒருவர் பொதுச்செயலாளராக வந்தால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும். தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறோம். கட்சியில் இருந்த பல தலைவர்கள் சென்று விட்டார்கள். தொண்டர்களும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக ஏதொவொரு விபத்து போல வந்துவிட்டார். அதேமாதிரி ஒரு விபத்தில் முதலமைச்சராகவும் இருந்தார். இவரை யாரும் விரும்பி ஏற்றுக் கொள்வது போல தெரியவில்லை.

செந்தில்குமார்
செந்தில்குமார்

தலைமை மாறினால் தான் ஜெயலலிதா சொன்னதுபோல, இந்தக் கட்சி நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழும். இல்லையெனில் கட்சி இன்னும் மோசமான நிலைக்குப் போகும். இதனால் எஸ்.பி.வேலுமணி கட்சியின் பொதுச்செயலாளராக வேண்டுமென குறிச்சி மாகாளியம்மன் கோயிலில் சாமியிடம் வேண்டுதல் வைத்துள்ளேன். இது நடந்தால்தான் கட்சி ஆரோக்கியமாக இருக்கும். எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பவர்களை கட்சியில் இருந்து நீக்குவது பிரச்னைக்கு தீர்வு அல்ல.

எனது கருத்தை பதிவு செய்ய எனக்கு உரிமை உண்டு. நாற்பது ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றி வருகிறேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் செயல்பாடுகளை எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டால், அவர் ஜீரோவில்தான் இருக்கிறார். துணிவுமிக்க தலைவர் கட்சிக்குத் தேவை. கட்சி தொடர்ந்து தோல்வி அடைவது குறித்தோ, கட்சியில் இருந்து விலகி செல்பவர்கள் குறித்தோ எடப்பாடி பழனிசாமி கவலைப்படுவதில்லை. அவர்களை தக்கவைக்க எந்த முனைப்பும் அவர் காட்டுவதில்லை. ஆளே இல்லாமல் கட்சியை எப்படி நடத்த முடியும்? நான் கொள்கைக்காக கட்சியில் இருக்கிறேன். என்னை பதவியில் இருந்து நீக்கினாலும், அடிப்படை உறுப்பினராக கட்சியில் தொடர்ந்து பயணிப்பேன்” என்றார்.

"வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசிவிட்டு, இப்போது..!"- பட்ஜெட் குறித்து சீமான்

"மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமற்று, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள... மேலும் பார்க்க

TN Budget: "5 ஆண்டுகள் முடியும்போது ஒட்டுமொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்"- தங்கம் தென்னரசு

தவெக அரசு 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவர்,... மேலும் பார்க்க

இரண்டு மசோதாக்கள் அமல்படுத்த பாஜகவின் பிளான்; ராகுலை சந்தித்த கிரண் ரிஜிஜு - ராகுல் சொன்ன 'நோ'!

தற்போது டெல்லியில் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதை யாராவது சொன்னால் தான் தெரியும் போல. தினமும் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அமளி ஏற்படத் தொடங்கிய வேகத்திலேயே சபை ஒத்தி வைக்கப்பட்... மேலும் பார்க்க

TN Budget: `வருந்தத்தக்கது; மக்களின் எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொள்ளவில்லை' - சிபிஐ வீரபாண்டியன்

‘தவெக அரசின் நிதிநிலை அறிக்கை சில பிரிவுகளில் முன்னேற்றம் காண வழிவகுக்கும். எனினும் பெரும் பகுதி, மக்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொள்ளவில்லை’ என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு... மேலும் பார்க்க

TN Budget 2026: `பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பா?' - இல்லை என விளக்கும் ராஜ்மோகன்!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக அரசு 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. இதில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44, 527 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. பலரும் ... மேலும் பார்க்க

ஆட்சி மாறியும் அரசின் கடன் தொடர்கிறது? - தவெக அரசின் ரூ.1.73 லட்சம் கோடி கடன் திட்டம்!

2026-2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு அரசு புதிய கடனாக ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 445 கோடி பெறத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில், ரூ.51 ஆயிரத்து 971 கோடி மதிப்பிலான பழ... மேலும் பார்க்க